Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

Monday, March 17, 2008

சிந்தனைக்கு சில


உங்கள் சிந்தனைக்கு சில….

-- "நான் அனுபவசாலி,
நான் சொல்வதைக் கேள்
என்று கூறி நம் முடிவைப் பலர் திசை திருப்ப முயல்கிறார்கள்.
அனுபவம் என்பது வெகு சில பொது அனுபவங்களே
எல்லோருக்கும் பொதுவாக இருக்கின்றன. மற்ற பெரும்பாலான அனுபவங்கள் தனிமனிதனின் சொந்த அனுபவங்கள்.
ஒரு விஷயத்தை ஒரு மனிதன் எப்படி ஏற்றுக் கொள்ளுகிறான்
என்பதை பொறுத்து அனுபவங்கள் பல்வேறு விதமாய் அமையலாம்.

"மார்க்டு வெயின்" என்ற அறிஞர் சொல்கிறார் :

பூனை பாடம் படித்துக் கொண்டது உண்மைதான்.
ஆனால் என்ன ஆயிற்று? "பூனை சூடான அடுப்புக் கல்லின் மீது உட்காருவதில்லை. அத்துடன் சூடில்லாத அடுப்புக்கல்லின் மீதும் உட்காருவதில்லையே".


-- மனிதனிடமுள்ள மிகப் பெரிய குறை
தன்னிடமுள்ள குறையை ஏற்றுக்கொள்வதில்லை.
நம்மைக் குறை கூறுகின்றவர்கள் யார்?
அவர்களது உள்நோக்கம் என்ன?
நம்மைக் குறை கூறுவதால்
அவர்களுக்கு என்ன லாபம் இருக்கிறது
என்று சில கேள்விகளை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்
என்றாலும் அப்படிச் சொல்கிறவர்களுக்கு உள்ள உள்நோக்கம்
என்ன என்று ஆராய்வதை விட,
அவர்கள் கூற்றில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்வதே முக்கியம்.


-- வீண்பேச்சு பேசுபவர்களின் பேச்சை ஆமோதித்தால்
அடுத்த அவதூறு உன் மேல்தான்.


-- திருட்டுப் பொருளை விலை கொடுத்து வாங்குபவன்
திருடனைப் போல் மோசமானவன் தான்.
அவதூறுகளைக் காது கொடுத்துக் கேட்பவனும் அப்படித்தான்.
(செஸ்டர் பீல்டு 1694 – 1773)


-- உங்கள் வாழ்க்கையின் மேம்பாட்டிற்குத்
தடையான வாசகங்கள் எவைகள் எல்லாம்
நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துகிறீர்களோ
அவற்றை தெளிவாகக் கண்டறியுங்கள்.
அவைகளை உங்கள் மனத்திலிருந்து வெளியேற்றுங்கள்.


-- சிறந்த மனிதர்கள் -
தங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.


-- மற்றவர்களைப் பற்றிய அவதூறுகளுக்கு
நான் சிறிது கூட முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
அவைகள் பொய்யாக இருந்தால் மற்றவர்களால் நான் சுலபமாக ஏமாற்றப்பட்டவனாக ஆகிவிடுவேன். அவைகள் மெய்யாக இருந்தால் உபயோகமற்றவர்களை வெறுக்க ஆரம்பித்து என் வாழ்க்கையை
நரகமாக மாற்றிக் கொள்ள வேண்டியதிருக்கும்.
(மான்டெஸ்கியூ)


-- மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் அவதூறு பேசுவதற்காக வாயைத் திறந்தால் நீ உன் காதை அடைத்துக் கொள்.
(குவாரல்ஸ் 1592-1644)


-- என்னைப்பற்றி தவறாக எண்ணும்படி செய்ய முயன்றதற்காக
அவதூறுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
அது என்னை அதிக எச்சரிக்கையாய் இருக்கும்படி செய்யும்.
என் செயல்களிலும் அதிக கவனமாய் இருக்கும்படி செய்துள்ளது.
(ஜான்ஸன் - 1709-1784)


-- அவதூறு -
கடல்களையும்,
மலைகளையும்,
பாலைவங்களையும்
எளிதில் தாண்டிச் செல்லும்.
(கோல்டன் 1780-1832)


-- கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.
தன் கையில் கூர்மையான ஆயுதம் வைத்திருந்த போதிலும்
கர்வத்தோடு வீரம் பேசக் கூடாது.


-- படைகளை விட -
வல்லமை உள்ளது சொற்கள்.
(ப்ரமர்ஸ்டன் பிரபு)


-- கடுஞ்சினமும்,
வஞ்சகமும்,
நம்மிடமிருந்து
செயல்படும் போது
அறிவுடைமையும்,
பண்பும்,
உண்மையும்
மறைந்து விடுகிறது
அல்லது மறைக்கப்பட்டு
விடுகிறது.


-- கோபங்களையும்,
வெறுப்புக்களையும்,
பழிவாங்கும் உணர்வுகளையும்
சேர்த்து வைத்திருந்து
அந்த கெடுதல் உணர்வுகளை
பேச்சாகவோ,
செயல்களாகவோ
வெளியேற்ற
மனிதர்கள் தகுந்த சந்தர்ப்பத்தை
தேடுகிறார்கள்.
ஏதாவது சிறு காரணம்
கிடைத்தால் கூட போதும்.


-- நீ புனிதனாகவோ,
போதகனாகவோ,
இருக்க வேண்டாம்.
மனிதனாக இருந்தாலே போதும்.


-- நாம் மற்றவர்களுக்கு
பிரியமானவர்களாக வேண்டும் என்றால்
நாம் தவீர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. ஒழுங்கின்மை,
கோபப்படுதல்,
நேரம் தவறாமை,
பிறறை குறை சொல்லுவது,
பொய் பேசுவது
இவ்விஷயங்களை தவீர்ப்பது நல்லது.


-- விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ளாமலேயே
நம் கருத்தை வலியுறுத்தும் திறமைக்குத் தான்
"கெட்டிக்காரத்தனம்" என்று பெயர்.


-- வார்த்தைகள் பூவைப் போன்றவை.
அதை தொடுக்கும் விதத்தில்
தொடுத்தால் தான் மதிப்பை பெற முடியும்.


-- திட்டி கெட்டாருமில்லை,
வாழ்த்தி வாழ்ந்தாருமில்லை.


-- அடுத்தவனுக்கு
ஆறுதல் சொல்லும் போது
இருக்கும் தைரியம்
தனக்குத் தேவைப்படும் போது –
அடுத்தவனிடம் போய்விடும்.
(கண்ணதாசன்)


-- தேவையற்ற எண்ணங்கள்,
தேவையற்ற பேச்சுக்கள்,
தேவையற்ற செயல்கள்,
தேவையற்ற நண்பர்கள்,
தேவையற்ற பழக்கவழக்கங்கள்,
தேவையற்ற பொழுது போக்குகள்
இப்படித் தேவையற்ற
பல நடவடிக்கைகளை
ஒழித்துக் கட்டும் போது
உங்களிடம் மிஞ்சி இருப்பது
மிகவும் தேவையானது மட்டுமே.


-- விரோதியால் கூட குற்றச்சாட்டப்பட முடியாதபடி
எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.


-- 'முடியாதது' என்பது
முட்டாள்களின் அகராதியில் உள்ள ஒரு சொல்.


-- தவறான நோக்கத்துடன் கூறப்படுகின்ற
ஓர் "உண்மை" என்பது
நீ கண்டு பிடித்துப் பயன்படுத்தும்
எல்லாவகைப் பொய்களிலும் மிக மோசமானது.


-- புறம்பேசும் வழக்கம் பலரிடம் வளருவதற்குக் காரணமே
அத்தகைய கூற்றுக்களை சுவையுடன் நாம் கேட்பதால் தான்.
ஒருவரில்லாத சமயம் அவரைப்பற்றி குறை சொல்லி
பேச்சு வந்தால் உடனடியாக அவரில்லாத போது அவரைப்பற்றி
பேசுவது முறையாகாது. நம்மைப்பற்றி மட்டும் பேசுவோம் என
பேச்சை திசை மாற்றம் செய்வது நல்லது.


-- செய்த ஒன்றை நேரடியாகச்
சுட்டிக் காட்டும் போது
அந்தச் செயலுக்கோ,
உதவிக்கோ இருந்த
மகத்துவம் சடாலென்று
மங்கிவிடுகிறது.
மதிப்பு போய்விடுகிறது.


-- 'தன்னம்பிக்கை' _
உள்ளிருந்து புறப்படும் ஒரு மாபெரும் சக்தி.
அது உள்ளவர்களை பேச்சின் மூலம்,
செயலின் மூலம்,
நடையுடை பாவனைகள் மூலம்
உடனே அறிந்து கொண்டுவிடலாம்.
தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கோ
எல்லாவற்றிலும் ஒரு தயக்கம்.
பேச்சில் தயக்கம்;
நடை உடை பாவனைகளில் தயக்கம்
இவர்கள் மற்றவர்களை
சார்ந்து இருக்கவே விரும்புவார்கள்.



_யார் பேசுகிறார்கள் என்பது முக்கியமல்ல, என்ன பேசுகிறார்கள் என்பது தான் முக்கியம். _வாழ்வில் முன்னேற நல்ல அடித்தளம் தேவை. அந்த அடித்தளங்கள் தான் நாமாக நம் வாழ்வில் அமைத்துக் கொள்ளும் சுயகட்டுப்பாடுகள். _யாருக்கும் எதற்கும் தீமை இல்லாத சொற்களையே பேசுவது தான் வாய்மை. _அளவுக்கு மீறிய பேச்சு – ஆழ்ந்த சிந்தனை மனப்போக்கிறகு எதிரான நிலையாகும். எப்போதும் பேசிக் கொண்டே இருப்பவர்களால் மனதை ஒருநிலைப்படுத்தி சிந்தனை செய்யவே முடியாமல் போய்விடும்._வீண்பேச்சு பேசிக்கொள்வது சிலருடைய பலவீனம்.உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று வடலூர் வள்ளலார் உள்ளமும், உடலும் ஒன்றாமல் இருப்பவர்களைப் பற்றி சொல்கிறார்._மனிதரை மனிதர் மதித்து நடந்தால் மதித்து பேசினால் அதுவே பண்பாடு. அதுவே சமூதாயநீதி. எந்தக் காலத்திலும் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மனிதர்களின் கண்ணியத்துக்கு பரஸ்பரம் மதிப்புக் கொடுத்து நடந்துக் கொள்வதே நீதி என்று எழுதியிருக்கிறார். – பிரெஞ்ச் சிந்தனையாளர் புரெதான். _பேச்சளவில் இருக்கிறது கொள்கைப்பிடிப்பு, கோட்பாடு, உறுதி எல்லாம். செயலில் இறங்கும் போது தான் சிக்கல் தன்னலக் குறுக்கிடுகள் ஏற்பட்டுவிடுகின்றன._தொலைகிறது விடுவோம் என்று பேசாமலிருக்கும் போது அநியாயம் செய்பவர்கள் தைரியம் பெறுகிறார்கள். அநீதி வலுக்கிறது._அறநெறிப்பற்றிப் பேசுவதன்று அறநெறியில் நடப்பதே சுவர்க்கத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும். எம். ஹென்றி (1662 – 1714)_தெளிவான பேச்சு – தூய்மையான உள்ளத்தின் எதிரொலி. - வில்லியம் லா (1686 -1781)_நாம் வாயைத்திறந்து பேசிக் கொண்டிருக்கும் வரையில் நம்மால் புதிய அறிவு எதையும் பெற முடியாது. அறிவைப் பெற வேண்டுமானால் நாலு பேருக்கு நடுவே இருக்கும் போது நம் வாயை மூடி சிந்தனையைத் திறந்து வைத்திருக்க வேண்டும்._நல்லெண்ணத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. நீங்கள் தான் உண்டாக்கிக் கொள்ள வேண்டும். உங்களது பேச்சின் போது, எழுத்தின் மூலம், செயலின் மூலம் இதை நீஙகள் உண்டாக்க வேண்டும். _நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள் என்பது முக்கியமானது. வெற்றி பெற்ற மனிதர்களோடு நீங்கள் பேசுகின்ற போது அது உங்களுடைய வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். _ஒவ்வொருவரும் தாங்கள் பாராட்டப்பட வேண்டும். போற்றப்பட வேண்டும் என விரும்புகிறவர்களாக இருப்பதால் அதை எப்போதும் கவனத்தில் வைத்தபடி பேசுங்கள்._உங்களைப்பற்றி அவதூறாகவோ மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். தனக்கு பிடிக்காத மனிதர்களைப்பற்றி நினைத்துப் பார்ப்பதே கிடையாது என்கிறார் "ஜெனரல் ஐசன்ஹோவர்"._பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நமது மனம் ஒன்றை எண்ணுகிறது. வாய் வேறொன்றைப் பேசுகிறது. செய்யும் காரியமோ வேறொன்றாக இருக்கிறது.நம் மனம் மொழி, மெய்களுக்குள் ஒருமைப்பாடு இல்லை. இம்முரண்பாடுகள் தான் மனிதவர்க்கத்தின் பலவீனத்துக்கே அடிப்படைக் காரணம். _பிறரைத்தூற்றுதல், இகழ்தல், கேவலப்படுத்திப் பேசுதல்,பரிகாசம் செய்தல், கண்டனம் செய்தல், பிறரைத் தாழ்த்திப் பேசுதல் -போன்றவைகளை தவீர்த்துக் கொள்ளுங்கள். குற்றம் இருந்தால் ஆதாரத்துடன் நயமாக, பக்குவமாக ஏற்றுக் கொள்ளும் வகையில் பேசுங்கள். _திறமை என்பது முக்கியமாக மொழியைக் கையாளும் திறமைதான்.பேச்சிலிருந்து பண்பாடு தெரியும். குணம் தெரியும்.அறிவாற்றல் அனைத்துமே தெரிந்துவிடும். _எப்படி பேசுவது? எதைப் பேசுவது? யாரிடம் எதைப் பேசுவது? எப்போது அதைப் பேசுவது? என்ற அறிவு நமக்கு இருக்க வேண்டும்._நாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்பது நமக்கு அப்பாற்பட்ட விஷயம். ஆனால் நம்முடைய பேச்சுக்கள் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டிய விஷயம். _எவ்வளவு மனிதர்களோ அவ்வளவு அபிப்பிராயங்களும் இருக்கும்._தீங்குகளை அடிக்கடி மன்னித்து விடலாம். ஆனால் இகழ்ச்சியை ஒரு போதும் மன்னிக்க முடியாது. – செஸ்டர் பீல்டு (1694-1773)_மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நாமே ஊகித்து உணர முயன்றால் அது பெரும்பாலும் தவறாகவே முடியும். மற்றவர்களின் நடவடிக்கைகளை வைத்து நாம் இதை ஓரளவு ஊகித்து விட முடியும் என்றாலும் அவர்கள் நம்மைப்பற்றி மற்றவர்களிடம் சொல்லும் அபிப்பிராயத்தின் மூலமாகவே இதை நன்கு உணர முடியும்._ஒருவரது குறையை வேறு எவரும் இல்லாத போது அவரிடம் மட்டும் கூறுவது பெருந்தன்மையாகும். அவரது சிறப்புகளை அவர் இல்லாத போது பிறரிடம் கூறுவது நாகரிகமாகும். _மனிதனிடம் அமைந்துள்ள குணங்கள் கொள்கைகள் ஆகியவையே வேறுபாட்டை உருவாக்குகின்றன._சொல்வன்மை : உணர்ச்சியின் வேகத்தை அணைக்கட்டித்தடுத்து சுருங்கச் சொல்லுதலே சொல்வன்மை. கூச்சல்கள், அதிகமான பேச்சுக்கள், கோபத்தை உண்டாக்குமே தவீர வேறு நன்மைகள் வரப்போவதில்லை._எப்போது பிறர் மனைவி பிறர் கணவர் மீது நாட்டம் ஏற்படுகிறதோ அப்போதே நமது அமைதி பெயர் குடும்பம் கௌரவம் எல்லாமே ஆட்டம் கண்டுவிடும். _பதினேழாம் நூற்றாண்டில் ஹாலந்து நாட்டில் ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் ஸ்பினோசா என்ற தத்துவஞானி வாழ்ந்தார். அவர் கூறுகிறார் : உன் அறிவும், புத்திக் கூர்மையும் வளரத் துணை செய்வது எதுவோ அதுவே உனக்கு நன்மை. உன் சக்தி வளர, உன் சுதந்திரம் வளர உறுதுணையாகக் கூடியதொன்றே உனக்கு நல்லது. உன் அறிவு வளர்ச்சியைத் தடுப்பதெல்லாம் தீமையானது என்று கருது. அறிவு வளர்ச்சி தடைப்பட்டாலும் உன் பேச்சு சுதந்திரம், பறிக்கப்பட்டாலும் உன் சுதந்திரம் குன்றிவிடும். உன் உயிராற்றல் தேய்ந்துவிடும்._எப்போது பிறர் மனைவி, கணவர் மீது நாட்டம் ஏற்படுகிறதோ அப்போதே நமது அமைதி பெயர் கௌரம் எல்லாமே ஆட்டம் கண்டுவிடும்._எவ்வளவு மனிதர்களோ! அவ்வளவு அபிப்பிராயங்களும் இருக்கும்._பாராட்டுக்களை அவையிலே சொல்லுவோம். குறைபாடுகளை நான்கு சுவர்களுக்கு நடுவே சொல்லுவோம்._என்ன சொன்னார் என்பதை யோசி!யார் சொன்னார் என்பதையல்ல._உன்னுடைய தவறுகளை மற்றவர்கள் மிகைப்படுத்தி சொல்வதற்கு முன்னால் ஒப்புக் கொள்._மனிதர்கள் வழக்கமாக எண்ணிக்கொள்கிறார்கள்.பலர் அடிமையாயிருப்பதன் காரணம் ஒருவன் கொடுங்கோலனாய் இருப்பதால் தான். ஆகவே அந்தக் கொடுங்கோலனை வெறுப்போம் என்று. இப்போது ஒரு சிலர் இதற்கு நேர்மாறான தீர்ப்பை வழங்குகிறார்கள். ஒருவன் கொடுங்கோலனாய் இருப்பதற்கு காரணம் பலர் அடிமைப்பட்டு கிடப்பதனால் தான். ஆகவே அடிமைகளை கேவலப்படுத்தி ஒதுக்குவோம் என்கிறார்கள்._நல்லெண்ணத்துடன் வாழ வேண்டும் என்று தீர்மானிக்கிறோம். அன்புடன் பழக வேண்டும் என்று சொல்லிக் கொள்கிறோம். வருகிற ஒருவரின் முகத்தைப் பார்த்த உடனேயே அவர் உதிர்க்கும் வார்த்தைகளைக் கேட்ட உடனேயே நமது மனஅமைதி குலைகிறது. பேசுபவரது பொறாமை, ஆணவம், தற்பெருமை, அலட்சியப் போக்கு எல்லாமே நம்மை நிலைகுனிய வைத்துவிடுகிறது. ஒரு மனிதனின் வரவால் அது இப்போது கறைபடிந்து விட்டது. நமக்கு வேண்டுவது நிதானம். நிலைகுனியாத பொறுமை._எதிர்பார்பபுகள் பொய்யாகிற போது - கூச்சல், குழப்பம், சண்டை, விரக்தி இவைகள் தான் தோன்றும்._படித்து தெரிந்து கொள்வது, தெரிந்ததைப் பகிர்ந்து கொள்வது இவை இரண்டும் இருந்தாலே விழிப்பு உணர்வு தானாக வளர்ந்து விடும். _கோபமாக பேசுவது என்பது யாருக்கும் எளிது. ஆனால் சரியான நபர் மீது, சரியான அளவில்,சரியான நேரத்தில்,சரியான நோக்கத்துடன்,சரியான வழியில் கோபப்படுவது எல்லோருக்கும் வராது._ஆறுவிஷயங்களைக் கொண்டு அறிவாளியைக் கண்டு கொள்ளலாம். காரணமில்லாத கோபம்,பயனில்லாத பேச்சு, முன்னேற்றமில்லாத மாறுதல், பொறுத்தமில்லாததைப் பற்றி ஆராயதல்,அன்னியனை நம்புதல், பகைவரை நண்பராகக் கருதுதல்._வாழ்க்கையின் எட்டுபடிகள் என புத்தர் காட்டும் பாதை 1. சரியாகப் புரிந்து கொள். 2. சுரியான எண்ணம். 3. சரியானபடி பேச்சு. 4. சரியான செயல்களில் ஈடுபடு. 5. சரியான தொழிலைத் தேர்ந்தெடு. 6. சரியான முயற்சியில் ஈடுபடு. 7. சரியான சிந்தனை. 8.சரியான கவனம்._தன் தவறுகளைத் திருத்திக் கொள்கின்ற தைரியம் - தனி மனிதனுக்கோ, ஒரு நாட்டுக்கோ எளிதான காரியம் அன்று.வீண்மானப் பிரச்சனை குறுக்கிடும்._மொழி - வெளியே இருந்து பெறும் பயிற்சி. மௌனம் - உள்ளே இருந்து எடுக்கும் முயற்சி. _பொறாமை உடையவர், வெறுப்பு நிறைந்தவர், எதிலும் திருப்தியற்றவர்,எதற்கும் சிடுசிடுத்துக் கொண்டு பேசுபவர்,எதையும் சந்தேகப்படுபவர்,பிறரைச் சுரண்டி வாழ்பவர்,இந்த ஆறுவகையான மனிதர்களும் ஒரு நாளும் மனநிம்மதியுடன் வாழமாட்டார்கள்._எல்லாவற்றையும் இகழ்ந்து பேசுவது என்ற கேவலமான நோய் உன்னிடம் இருந்தால் அதை விரட்டிவிடு. _எதிர்பார்ப்புகள் பொய்யாகிற போது - கூச்சல், குழப்பம், விரக்தி இவைகள் தான் தோன்றும்._படித்துத் தெரிந்து கொள்வது , தெரிந்ததைப் பகிர்ந்து கொள்வது - இவை இரண்டும் இருந்தாலே விழிப்பு உணர்வு தானாக வளர்ந்து விடும்


பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்
நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது

சிந்தனை செய்


காலந் தவறாமல் செய்ய வேண்டும் !
கடின உழைப்பால் பெற வேண்டும் !
உழைப்பால் உயர உண்மை வேண்டும் !
ஆற்றிய பணிகள் சொல்லும் நம்மை !
போற்றிய செயல்கள் பேசும் நம்பெருமை !
விட்டுக் கொடுத்தால் உயர்வோம் !
வீட்டில் கடமை வெளியில் கடமை
வேத வாக்காய் விளங்க வேண்டும் !
பிள்ளைகள் பேச்சும் செயலும்
பெற்றோர் பின்புலம் ! மற்றவர்
பார்வை நம் உட்புலம் !
நல்ல உள்ளங்கள் நல்ல செயல்கள்
நாம் பெற்ற பேறு ! கற்றதின் பரிசு !
நன்செயல் எண்ணவும் இன்சொல் பேசவும்
தயங்காதே ! இதில் என்ன சுமை !
சுவை தானே இவை !
காலத்தால் அழியாத கவி அல்லவா !
ஆற்றிய பணிகள் சொல்லும் நம் அருமை !


துன்பங்கள் நிஜத்தில் துரும்புகள்

பொறுமை ஒவ்வொருவருக்கும் அவசியமான குணம். ஒருவனுக்கு எவ்வளவு பொறு மை குறைகிறதோ, அவன் அவ்வளவு இழப்புகளை கண்டிப்பாக சந்தித்தே தீர வேண்டும். அவன் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி காணவே முடியாது.

பொறுமை உள்ளவனுக்கு இந்த உலகமே சொந்தம். பொறுமையும், சகிப்புத்தன்மையும் இல்லாதவர்கள் இறைபக்தியிலும் ஈடுபட முடியாது. இறைவன் அருள் வேண்டுபவர்கள் முதலில் இக்குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு தியானம் அவசியம்.

மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் செய்யும் செயலுக்கும், எண்ணங்களுக்கும் ஏற்ப அடுத்த பிறப்பை எடுக்கின்றனர். ஆகவே, எந்த சூழ்நிலையிலும் எண்ணங்கள் நல்லவையாக இருப்பது அவசியம்.

உங்களது இன்பத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் தீய செயல்களைச் செய்யாதீர்கள். இவர்கள் மறுபிறப்பில் இல்லாவிட்டாலும், இந்த பிறப்பிலேயே மற்றவர்களைவிட தாழ்ந்தவர்களாகவும், பிறரால் மதிக்கப்படுபவராக இல்லாமலும் திகழ்வர். இத்தகைய பிறப்பெடுத்து ஒரு பயனும் இல்லை.

தைரியத்துடன் இருங்கள். எந்த துன்பத்திற்கும் கலங்காதீர்கள். அவற்றால் உங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. பிரச்னையை நேரே பார்க்கும்போது, பெரிய துன்பம் போல தெரியும். ஆனால், உண்மையில் அது ஒன்றுமில்லாத சிறிய துரும்பாகவே இருக்கும். எனவே, பயப்படுவது தேவையற்றது. மனதில் தைரியம் இல்லாதவர் ஆண்தன்மை இல்லாதவர் ஆவர். இவர்கள் மறுபிறப்பில் புழுக்களாகவே பிறப்பார்கள்
கடமையே பெரிய வேள்வி

குழந்தைக்குத் தாய் பேசக் கற்றுக் கொடுக்கிறாள். பேச வேண்டியது குழந்தையே. ஆசான் மாணவனுக்குக் கல்வி போதிக்கிறார். கற்று அதன்படி நடக்க வேண்டியது மாணவனின் கடமையே. இறைவனை மனக் கண்ணின் முன் நிறுத்தி அவனோடு ஒன்றி விடுவது மனிதனின் கடமை.

உன் கடமைகளைச் சரிவர ஆற்ற வேண்டி பிரார்த்தனை செய். கட்டாயம் உன் பிரார்த்தனைக்குக் கடவுள் செவி சாய்ப்பார். இறைவனின் மேல் பாரத்தைப் போட்டு விட்டு, கடமையை மறந்து விடாதே. மாட்டுக்காரன் மேய்ச்சல் காட்டுக்கு ஓட்டித்தான் போவான். மேய வேண்டியது மாடுதானே! உன் கடமையை செய். பலனுக்காக கையேந்தாதே. அதுவே பெரிய வேள்வி ஆகும்.

புடலங்காயில் ஒரு சுமையைக் கட்டினால் வளையாது நீண்டு வளரும். மனிதனுக்கும் கடமை என்னும் சுமையைக் கட்டினால், வளையாது நேராக வாழ்வான். நீ எங்கு சென்றாலும் உன் கடமையைச் செய். உன்னுள் இருந்த நான் வழிகாட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து கொள்.

ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் இறைவன் உன்னுடன் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொள். நீ அவனுக்கு மிகவும் நெருக்கமானவன். கண் இமைகள் விழியைக் காப்பது போல, இறைவன் உன்னைக் காப்பாற்றுவான். அவன் உன்னை விட்டு விலகமாட்டான். நீயும் அவனை விட்டு விலக முடியாது. இந்த நிமிடத்திலிருந்து எதையும் எதிர்பார்த்துச் செயல்படாதே! மாறாத அன்புடன் உன் கடமையைச் செய்
நல்ல எண்ணங்களை வளர்ப்போம்

கடமைகளை மனப்பூர்வமாகச் செய்தால் உரிமைகள் உங்களை தேடி தானாக வரும். கடமைகளை செய்யாமலே உரிமைகளை தேடினால் அவை கானல் நீர் போல் ஆகிவிடும். உரிமைகளை மட்டும் எண்ணிய எந்தச் சமுதாயமும் மேன்மை அடைந்ததில்லை. கடமைகளை கருதியவர்களே உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார்கள். நீங்கள் செய்யும் கடமைகளால் கிடைக்கும் உரிமைகளை சுயநலமில்லாமல் சமுதாயத்திற்காக பயன்படுத்துங்கள்.

இந்த உலகத்தில் யாரும் தாழ்ந்தருமில்லை, உயர்ந்தவருமில்லை. உயர்வு, தாழ்வு என்ற எண்ணத்தை நம்மிடம் இருந்து அகற்ற வேண்டும். நம்மைவிடச் சிலர் தாழ்ந்தவர்கள் என்று நாம் கருதும்போது நம்மிடம் தீமையே அதிகமாக நிறைந்திருக்கிறது. இந்த தீமையை நாம் ஒழிக்காவிட்டால் அது நம்மை அழித்துவிடும்.

உங்களது எண்ணம் எப்பொழுதும் துõய்மையாகவும், புதுமையானதாகவும் இருக்க வேண்டும். கெட்ட காற்று

வெளியேற வேண்டுமானால் நல்ல காற்று வேகமாக உள்ளே நுழைய வேண்டும். அதுபோல் கெட்ட எண்ணம் வெளியேற நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும். எண்ணத்தை விட வலிமையானது வேறு எதுவும் கிடையாது. உங்கள் எண்ணங்களை ஒருபோதும் ஒளித்து வைக்காதீர்கள். அவற்றை வெளியே சொல்வது கேவலம் என்றால், அவ்வாறு நினைப்பது இன்னும் கேவலமானது.

உடல் பலத் தினால் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. ஆன்மபலமே வெற்றி தரும்.
சமநிலையுள்ள மனம் வேண்டும்

* காற்று வீசாதபோது விளக்கு, ஆடாமல் நின்று எரிகிறது. அதுபோல மனதில் சஞ்சலம் இல்லாவிட்டால், உள் மனதில் உள்ள அறிவு ஒளி அற்புதமாக எரியும். எனவே, மனம் சமநிலையுடன் இருக்க வேண்டும்.

* பதட்டமும், ஆரவாரமும் நிறைந்த இந்த உலகில் சம நிலையான மனத்துடன் பலன் எதிர்பார்க் காமல் செயல்பட வேண்டும். பலன் எதிர்பாராத செயல்களில் தான் இறையுணர்வு இருக்கும்.

* கடமையே பெரிது என நினைப்பவர்கள் விழிப்பு, சமநிலை, செயல்திறன், சுயநலமின்மை, அனுபவத்தில் ஆர்வம் போன்றவற்றுடன் இருக்க வேண்டும். வெற்றி கிடைக்குமா கிடைக்காதா என்ற எண்ணத்தை விட்டுவிட்டு ஒழுங்காக ஒரு செயலைச் செய்தாலே வெற்றி நிச்சயம் தான்.

* சூரியஒளியோ, மண்ணோ, நீரோ மட்டும் தனித்து ஒரு செடியை வளரச் செய்ய முடியாது. நிலத்தில் விதையைப் போட்டு, நீர் ஊற்றினால் அவ்விதை மக்கிப் போகும். விதையை நீரில் போட்டால் அழுகிவிடும். சூரிய ஒளியில் போட்டால் கருகிவிடும். இம்மூன்றும் நியாயமான முறையில் சேர்ந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவ்விதை முளைத்து செடி மரமாகும். இப்படி, ஒரு செயலுக்கு பல காரணங்கள் தேவைப்படுகின்றன. அதில், நம்முடைய பங்கை மட்டும் நாம் செலுத்திவிட்டு, மற்றவற்றை இறைவனிடம் விட்டுவிட வேண்டும். நாமே எல்லாவற்றையும், நம் விருப்பப்படியே செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால், நமக்கு ஒரு போதும் மன அமைதி கிடைக்காது.
மனம் உங்கள் நண்பனாகட்டும்!

˜ஒவ்வொருவரும் கடமையைச் செய்யும்படி விதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, கடமையை நிறைவேற்றியே ஆக வேண்டும். அதனை பரிபூரணமாக செய்வதற்கு மட்டுமே உங்களுக்கு முழு உரிமை தரப்பட்டிருக்கிறதே தவிர, அதன் பலன் குறித்த எதிர்பார்ப்பிற்கான உரிமை தரப்படவில்லை. ஆகவே, கடமையை கருத்தாக நிறைவேற்றுங்கள். அதனால் உண்டாகும் பலனில் உங் களது விருப்பங்களை எதிர்பார்க்க வேண்டாம்.

˜மனமானது ஒவ்வொருவரின் நடத்தைகளைப் பொறுத்தே நண்பனாகவும், எதிரியாகவும் அமைகிறது. யார் ஒருவர் மனதை அடக்கி அதனை வெற்றி கொள்கிறாரோ, அவருக்கு மனம் சிறந்த நண்பனாகவும், அடக்க முடியாமல் அதன் போக்கிற்கு விடுபவருக்கு முதல் எதிரியாகவும் இருக்கிறது. மனதை உங்களது நண்பனாக வைத்திருக்க முயற்சியுங்கள்.

˜உங்களுடன் வாழ்பவருக்காகவோ, உங்களை விட்டு பிரிந்து சென்றவருக்காகவோ மனம் வருந்தாதீர்கள். அவ்வாறு வருந்துவது அறியாமையின் வெளிப்பாடாகத்தான் இருக்கும். உண்மையான அறிஞர்களை இத்தகைய நிகழ்வுகள் பாதிப்பதில்லை.

˜நடந்தவை, நடப்பவை, நடக்க இருப்பவை மட்டுமின்றி எல்லா ஜீவராசிகளைப் பற்றியும் நான் அறிந்திருக்கிறேன். என்னை அனைத்திலும் அனைத்துமாக காண்பவர்களுக்கு நான் எப்போதும் இழக்கப்படாதவனாகவே இருக்கிறேன். நானும் அவர்களை இழப்பதில்லை. அத்தகையவர்களை எப்போதும் என்னுடனேயே வைத்துக் கொள்கிறேன்.

தற்பெருமை அழிவைத்தரும்

* மருத்துவர்கள் நோயாளிகளிடம் "எனக்கு வியாதியே இல்லை' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கும்படி அறிவுரை கூறுகின்றனர். நோயாளிகள் அப்படிச் சொல்வதனால் வியாதிகள் அகலுவதற்கான சாதகமான நிலை உண்டாகிறது. அதுபோல, இவ்வுலகில் நீ தாழ்ந்தவன் என்று எண்ணிக் கொண்டால், சீக்கிரத்தில் தாழ்ந்தவனாகவே ஆகிவிடுவாய். அளவிட முடியாத அளவிற்குத் திறமை உன்னிடம் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டால், அவ்வாறே திறமைகள் மிகுந்தவனாய் ஆகிவிடுவாய்.

* கல்லானது தண்ணீருக்குள் வருடக்கணக்கில் கிடந்தாலும் அதனுள் தண்ணீர் நுழையாது. ஆனால், களிமண் தண்ணீருக்குள் கிடந்தால் கரைந்து விடும். அதுபோல திடமான நம்பிக்கையுள்ள மனமுள்ளவர்கள், சோதனையால் தடுமாற்றம் அடைவதில்லை. நம்பிக்கை இல்லாதவருடைய மனம் சிறு காரணத்திற்கு கூட சலனமடையும்.

* குருவின் சக்தியின்மீது திடமான நம்பிக்கை கொண்ட ஒரு சிஷ்யன், குருவின் பெயரைச் சொல்லிக் கொண்டே ஆற்றின் மீது நடந்து போனான். இதைக் கண்ட குரு "என் பெயருக்கே இவ்வளவு மகிமை இருக்கிறதென்றால், எனக்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும். இது எனக்கு இவ்வளவு நாள் தெரியாமல் போய்விட்டதே என்று நினைத்தபடியே, அவரும் தண்ணீரின் மீது நடக்க ஆரம்பித்தார். ஆனால், கால் வைத்தவுடன் மூழ்கிவிட்டார். நம்பிக்கையால் அபூர்வமான காரியங்களைச் சாதிக்கலாம். ஆனால், தற்பெருமை அழிவைத் தரும்.
அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்

* அடுத்தவர்களது விஷயத்தில் தலையிடுவதும், அவர்களைப் பற்றி குறை சொல்வதும் கூடாது. உங்களுக்கு தெரிந்தே ஒருவர் தவறு செய்கிறார் என்றாலும் அமைதியாக இருந்து விடுங்கள். அவரது தவறை குறை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ஏனெனில், ஒருவரது குறையை சுட்டிக்காட்டி தீர்ப்பு சொல்லும் அதிகாரத்தை கடவுள் உங்களுக்கு கொடுக்கவில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து அவர்களை இயக்கும் கடவுளே, அவர்களை அவ்வாறு செயல்படும்படி துõண்டுகிறார். ஆகவே, அடுத்தவரது செயல்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

* ஓரிடத்தில் நடக்கும் செயல் உங்கள் பார்வைக்கு தவறாக தெரியலாம். அதற்காக நீங்கள் அச்செயலை தடுத்து நிறுத்தவோ, மறுப்பு தெரிவிக்கவோ கூடாது. உலகில் எந்தவொரு செயலும் கடவுளின் அனுமதியில்லாமல் நிச்சயமாக நிகழ்வதே கிடையாது. ஆகவே, நீங்கள் அச்செயலை தடை செய்யும் விதமாக செயல்படுவது கடவுளின் விருப்பத்தை தடை செய்வது போலவும், அவரது தீர்ப்பை விமர்சிப்பது போலவும் ஆகும். ஆகவே, என்ன நடந்தாலும் நன்மைக்கே நடக்கிறது என்று ஒதுங்கிக்கொள்ளுங்கள்.

* நீங்கள் நிம்மதியாக இருக்க விரும்பினால், அடுத்தவர் வேலையில் கவனம் செலுத்தாமல், உங்கள் வேலையில் மட்டும் கவனத்துடன் இருங்கள். அவரை கவனித்துக் கொள்வதற்கு கடவுள் இருக்கிறார். ஆகவே தானுண்டு, தன் வேலையுண்டு என்று செயல்படுங்கள்.
இளமையிலேயே கடமையைச் செய்

*உலக வாழ்க்கை என்பது கற்பாறைகளும் குன்றுகளும் குறுக்கிடும் காட்டாறு போன்றது. அதில் தான் உன் குடும்பம் என்னும் படகைச் செலுத்தியாக வேண்டும். அதை செலுத்திட துடுப்புகளைத் துடிப்புடன் போட இளையபருவம் தான் ஏற்றது. அதில் வலுவுடன் செயல்பட்டு, காட்டாற்றைக் கடந்து அக்கரையில் உள்ள இறையடியைச் சேரவேண்டும். எல்லையற்ற பேரின்ப வாழ்வினை எய்த வேண்டும்.

* நீ பருவ வயதில் ஊர்சுற்றிக் கொண்டு காலத்தை வீணாக்கினால் முதிய பருவத்தில் உன் உடல் வலிமையும், மன வலிமையும் இழந்து வாழ்க்கைப் படகை துரிதமாக இயக்க முடியாமல் அது இடர்ப்படும். இளமை நிரந்தரமானதல்ல. அது, நகர்ந்து செல்லும் மேகங்களை போன்றது. அந்த அந்த பருவத்தில் கடமைகளை சரியாக செய்தால் பேரின்ப வாழ்வை அடையலாம்.

* கத்தியை தீட்டுவது என்பது கல்லை வழுவழுப்பாக மாற்றுவதற்காக அல்ல. கூர்மையும், வெட்டும் சக்தியும் அதிகரிப்பதற்காகத்தான். அதே போல வாழ்க்கையில் இனிமை சேர்த்து வாழ நீ உனக்குள்ளே உற்சாகம், சாகசம், தைரியம், புத்தி, சக்தி, பராக்கிரமம் ஆகிய குணங்களை வளர்த்துக் கொள். இந்த நல்ல குணங்கள் உனக்கு சுகத்தை தரும்.

* பெரியோரைக் கவுரவியுங்கள். பெற்றோரைக் கவுரவியுங்கள். அவர்களை வணங்கி இறைவனை நண்பனாக அடையுங்கள்.

* கடவுள் உங்களைச் சோதித்தால், அது உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் பாதுகாப்பு தருவதாக எண்ணுங்கள். என்ன நேர்ந்தாலும் அது நன்மைக்கே என நினையுங்கள்.
வாழ்க்கைக்கு ஆதாரமானவர்

கடலில் ஒரு கப்பல் சென்று கொண்டிருக்கிறது. அவ்வழியே பறந்து சென்ற பறவை ஒன்று கப்பல் மீதுள்ள பாய்மரத்தில் அமர்கிறது. நீண்ட துõரம் பயணித்த பறவைக்கு, ஒரே இடத்தில் அமர்ந்திருக்க பிடிக்கவில்லை. வேறு இடம் தேடி அவ்விடத்தைவிட்டு பறந்து சென்றது. அப்பறவை எங்கு சென்றாலும் கடலில் தண்ணீர் மட்டும்தான் இருந்ததே தவிர அமர்வதற்கு இடம் எதுவும் கிடைக்கவில்லை. வெறுப்படைந்த அப்பறவை மீண்டும் கப்பலை அடைந்து, பாய்மரத்தின் மீது அமர்ந்து கொண்டது. இதைப்போலத்தான் மனிதர்களும் இருக்கும் இடத்தைவிட்டு வேறு இடத்தை விரும்பிச் செல்கின்றனர். ஆனால், அவர்களுக்கான சரியான இடம் எங்கும் கிடைக்காமல் இருந்த இடத்திற்கே திரும்பி விடுகின்றனர். கடவுளும், பாய்மரம் போன்றவர்தான். நீங்கள் அவரை விட்டு எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கு உங்களுக்கு சரியான ஆதரவு கிடைக்காது.

இந்த உலகில் கடவுள் ஒருவர்தான் அனைவரது வாழ்க்கைக்கும் ஆதாரமாக இருக்கிறார். உங்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தோ, வாழ்க்கையின் ஆதாரத்தை அமைத்துக் கொடுத்தோ காப்பாற்றுகிறார். உங்களுக்கு வேலை தந்தவர்களை, உங்களுக்கு உதவி செய்யும்படியாக துõண்டிவிட்டவர் கடவுள்தான். அவர் பலரது வடிவில் உங்களுக்கு அருள் செய்கிறார். ஆனால், நாம் தான் இதைப்புரிந்து கொள்வதில்லை. எனவே, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் கடவுளிடம் உங்களை முழுமையாக ஒப்படைத்து விடுங்கள்.
மனதை அமைதிப்படுத்த வழி

* ஒருவனை ஆட்டிப்படைக்கும் சக்திகளில் மனமே முதலிடம் பிடித்திருக்கிறது. பல வழிகளில் வெளிப்படும் இன்ப, துன்ப எண்ணங்கள் உடல் வழியாகவும் வெளிப்படுகிறது. உள்மனதில் இன்பமுடன் இருப்பவன் வெளியில் உற்சாகமாக செயல்படுகிறான். எந்த செயலிலும் அதிக நாட்டத்துடன் செயல்பட்டு அதில் வெற்றி காண்கிறான். அதேசமயம் மனதில் துயரங்களுடன் இருப்பவன் எதிலுமே அக்கறையுடன் செயல்படுவதில்லை. அவன் மனம் எந்த செயலிலும் ஒன்றாமல், துயரத்தை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால், எளிதாக செய்யக்கூடிய செயலில்கூட அவன் வெற்றி பெற முடியாமல் தடுமாற்றம் அடைகிறான். எனவே, மனதை எப்போதும் ஒரே நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.

* மனம் விழித்திருக்கும்போது பல நிகழ்வுகளைப் பற்றி சிந்தித்து அலைபாய்கிறது. அது துõங்கும்போது கூட வேறு விதமாக செயல்பட்டு, தான் விரும்பி நடக்காத செயல்களை, கனவு பிம்பமாக கண்டு மகிழ்கிறது. மனதை அமைதிப்படுத்த இறைவனிடம் பக்தி செலுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

* மனிதன் எப்போதும் தன் மனதுடன் ஒரு தொடர் போராட்டம் நடத்திக் கொண்டே இருக்கிறான். மனப்போராட்டம் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதியே என்னும் அளவிற்கு, மனம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இப்படியாக உருவம் இல்லாத மனம் ஒவ்வொருநாளும் நடத்தும் போராட்டத்தில் இருந்து விடுபட முயற்சி செய்யுங்கள். முதலில் அது கடினமாக தெரிந்தாலும், பின்பு சரியாகி விடும்.
அடுத்தவர்களுக்காக செலவிடுங்கள்

* பணத்தின் மீது ஆசை கொள்ளாதிருங்கள். பணஆசையே பல தவறுகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது. இன்று உங்களிடம் இருக்கும் செல்வம் நாளை வேறு ஒருவரிடம் சென்று விடும். நிலையற்ற செல்வம் மீது விருப்பம் இல்லாமல் வாழுங்கள். உங்களது அத்தியாவசிய தேவைக்கான செல்வத்தை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ அது மட்டுமே உங்களுக்கு போதுமானதாக இருக்கும். செல்வம் உங்களிடம் இருப்பதைவிட, இல்லாமல் இருப்பதே நன்மைதரும். செல்வத்தை வேண்டாம் என்று ஒதுக்குவது ஒருவகையில் அறிவான செயலும் ஆகும்.

* உங்களிடம் இருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்கு உதவுவதற்கு செலவிடுங்கள். அதை கையிலேயே வைத்து கொண்டிருக்காதீர்கள். எந்த நற்செயலை செய்வதற்கு பயன்படாத செல்வம் இருந்தும் இல்லாதது போலத்தான். செல்வத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். கையில் இருக்கும் செல்வத்தை அடுத்தவர்கள் பயன்படுத்துவதற்காக கொடுப்பது உங்கள் மனதில் இருக்கும் அன்பின் உச்சகட்ட வெளிப்பாடாகும்.

* செல்வத்தால் அனைத்தும் கிடைப்பதாக எண்ணி போலியாக வாழ்பவர்கள் உண்மையான வாழ்க்கையை பார்ப்பதே இல்லை. பறவைகள் தரையில் விரிக்கப்பட்டிருக்கும் வலையை பார்க்காமல், தானியத்தை எடுக்கச்சென்று சிக்கிக்கொள்வது போல, இவர்களும் ஆசைகளில் சிக்கி, உண்மை வாழ்க்கையை பார்க்காமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். செல்வத்தின் மீதான பற்றை துறப்பவர்கள் நல்வாழ்க்கை காணலாம்.
செயல்பாட்டில் அதிக கவனம் வேண்டும்

* குளிர்காலத்தில் உடலுக்கு கதகதப்பு தேவை என விரும்புகிறீர்கள். அதற்கு நெருப்பு அவசியம். நெருப்பு வேண்டும் என்பதற்காக நீங்கள் நெருப்பை உடலில் வைத்துக்கொள்வதில்லை. நெருப்பின் அருகில் மட்டும் அமர்ந்து கொள்கிறீர்கள். அப்போது நெருப்பின் தாக்கத் தால் உடல் சூடாகிறது. இதனால், குளிரும் தணிகிறது. இதைப்போலவே, நீங்கள் குருவிடம் பாடம் கற்கும்போது அவருக்கு அருகில் கேட்க வேண்டும். இதனால், உங்களுக்குள் கூடுதல் மாற்றங்கள் உண்டாகும். இவ்விடத்தில் அருகில் கேட்க வேண்டும் என்பது அவரை நெருங்கி அமர்ந்து கேட்க வேண்டும் என்பதில்லை. அவர் சொல்லும் கருத்துக்களை மிகவும் ஒன்றி கேட்க வேண்டும் என்பது பொருள். எதிலும் சிரத்தையுடன் செயல்படுபவர்களுக்கு தோல்வி என்பதே வருவதில்லை.


* ஒரு லட்சியத்தை நோக்கி நீங்கள் சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது, மனதை லட்சியத்திலேயே நிலைநிறுத்தி செயல்படுங்கள். ஒரு சிறு கணத்தில் கூட நீங்கள் அதில் காட்டும் ஈடுபாட்டில் இருந்து விலகிவிடக்கூடாது. நீங்கள் அதனைப் பற்றி எப்போதும் நினைக்கும்போது, அதன் உண்மை நிலை நன்கு புலப்படும். மேலும் எந்த நேரத்தில் எப்படி செயலாற்றலாம் என்ற எண்ணமும் வெளிப்படும். மனம் எப்போதும் அதனையே எண்ணிக்கொண்டிருப்பதால், அதற்கு அதீத சக்தி கிடைக்கிறது. அந்த சக்தியே எப்போதும் உத்வேகத்துடன் செயல்பட்டு செய்யும் செயலுக்கு வெற்றியைத் தருகிறது
கவலையை மறக்க வழி

* இந்த உலகத்தில் கவலைகள் ஏராளம். அவற்றை நினைக்கும்போதே மனம் பகீரென்கிறது. அவற்றில் விஷசக்தி ஒளிந்து கிடக்கிறது. ஒருவனது முகத்திலுள்ள அழகையும், ஒளியையும், இளமையையும் இந்தக் கவலை எவ்வளவு சீக்கிரம் அழித்து விடுகிறது தெரியுமா? கண்களின் ஒளியைப் மாற்றி விடும் இந்தக்கவலை, உடலின் நிறத்தைக் கூட குறைத்து விடுகிறது.

* கவலையால் நெற்றியிலே வரிகள் உண்டாகின்றன. கன்னங்களில் சுருக்கம் ஏற்படுகிறது. இனிய குரல் மாறி கரகரப்பான சப்தம் உண்டாகிறது. மார்பும், தோள்களும் பலமிழந்து விடுகின்றன. ரத்தஓட்டம் தடைபட்டு, உடலுக்குள் ஏதோ அழுக்குநீர் ஓடுவது போல் உணர்வு ஏற்படுகிறது.

* கவலைப்படும் ஒருவனின் கால்கள் தடுமாறுகின்றன. அந்த விஷப்பூச்சி சரீரத்தை உள்ளூர அரித்து விடுகிறது. அறிவை அழித்துவிடுகிறது. மறதியை உண்டாக்குகிறது. படித்தபடிப்பு பாலைவனத்தில் பெய்த மழையாகி
விடுகிறது.

* கவலைகள் மறைய மனதை இறக்கச் செய்ய வேண்டும். மனம் என்று மடிகிறதோ அன்று கவலைகள் அழிந்து விடும். கவலை என்ற அசுரர்களை பெற்றுத்தள்ளும் தாயே மனம். அந்த அரக்கியிடம் இருந்து என்று விடுபடுகிறோமோ, அன்று கவலையற்ற உலகம் எனப்படும் உபசாந்தி லோகத்தை அடையலாம்.

* மனதைக் கொன்றுவிட்டு, அதன் மூலமாக நமக்கு கிடைக்கும் நன்மைகளையும் விட்டுவிடக்கூடாது. கவலைகளை மறக்க மனதைக்கொல்ல வேண்டுமென்பதில்லை. இந்த உலக வாழ்க்கையை நமக்கு தந்ததே மனம் தான். மனதை நல்லதன் பக்கம் திருப்பினாலே போதும்.
நண்பர்களின் தவறை திருத்துங்கள்

* நீங்கள் எப்போதும் எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவர்களாக இருங்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒரு பணி கொடுக்கப்பட்டால் அதனை சிறப்பாக செய்து முடியுங்கள். அதைவிடுத்து அச்செயலில் கவனம் செலுத்தாமலும், சரியாக ஈடுபாடு காட்டாமலும் இருக்காதீர்கள். இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு நீங்கள் மட்டும்தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். நம்பிக்கைக்கு உரியவராக செயல்படாதவர்கள் மீது இறைவனும் நம்பிக்கை வைப்பதில்லை.


* நல்ல செயல்களையே செய்யுங்கள். நல்ல சிந்தனைகளை மட்டுமே வெளிப்படுத்துங்கள். எந்த செயலையும் செய்யும் முன்பு நல்லவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொள்ளுங்கள். ஒரு செயல் செய்வதால் ஏற்படும் நன்மை, தீமை பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து வைத்திருந்தாலும்கூட அதனை செய்வதால் நன்மைகள் உண்டாகுமா என நல்லவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். ஏதாவது ஒரு வகையில் அச்செயலால் துன்பம் நேரலாம் என அவர்கள் கூறினால் அதனை அப்படியே கைவிட்டுவிடுங்கள். எந்த நிலையிலும் நல்லவர்கள் விரும்பாத செயல்களை மட்டும் செய்யாதீர்கள்.


* நட்புக்கு எப்போதும் மரியாதை கொடுங்கள். உங்களிடம் நட்புடன் பழகும் ஒருவர் தவறான பாதையில் சென்றால் அதனை சுட்டிக்காட்டி திருத்துங்கள். அதைவிட்டுவிட்டு அவரது வழியிலேயே நீங்களும் செல்லாதீர்கள். தீய வழியில் செல்லும் நண்பர்களை திருத்துவதுதான் உண்மையான நண்பர்களுக்கு அழகாகும்.
தெய்வம் இருப்பது எங்கே?


* பக்தியுடன் இருப்பவர்களின் மத்தியில்தான், நாத்திகம் பேசுபவர்களும் இருக்கிறார்கள். நாத்திகவாதிகளின் பேச்சைக்கேட்டு கடவுள் ஏன் அமைதியாக இருக்கிறார் என சிலர் மனம் வருந்துகிறார்கள். அவர்கள் அப்படி பேசுவதும் இறைவன் செயல்தான். தர்மம் இருக்கும் இடத்தில்தான் அதர்மமும் இருக்கிறது. நாட்டில் அதர்மமான செயல்கள் நடக்காமல், தர்மம் ஒன்று மட்டுமே இருந்தால் அதன் மதிப்பு தெரியாமல் போய்விடும். அதனால் தான் ஆத்திகம் இருக்கும் இடத்தில் நாத்திகமும் இருக்கிறது.

* கடவுளுக்கு உண்மையாக சேவை செய்யப்படும் இடத்தில் அன்பு, சுயநலமின்மை, அனைவருக்கும் உதவும் தன்மை போன்ற அனைத்து மேலான நல்ல குணங்களும் இருக்கும். ஏனென்றால், அவ்விடத்தில் கடவுள் இருக்கிறார். ஆனால், சேவை செய்வதாக கூறி எதுவும் செய்யவில்லை என்றால் அங்கு நிச்சயமாக கடவுள் இருப்பதில்லை. அங்கே அனைவரும் வேடம் தரித்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

* ஒரு சிலர் மக்களை ஆளும் பதவியையோ அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பையோ ஏற்றுக் கொண்டால் அவர்கள், தங்களால்தான் அனைத்தும் நடக்கிறது என்றும், தான் இல்லாமல் எதுவும் அசையாது எனவும் மார்தட்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு சொல்பவர்கள் அறியாமையின் உச்சத்தில் இருப்பவர்கள் ஆவர். இந்த உலகம் கடவுளின் விருப்பப்படிதான் இயங்கிக்கொண்டிருக்கிறது. அவரே அனைத்தையும் இயக்குபவராகவும், இயங்குபவராகவும் இருக்கிறார்.
தோல்விக்கு காரணமும் இறைவனே!


* ஒரு சிலர் தாங்கள் செய்த செயல்களில் தோல்வி ஏற்பட்டுவிட்டால் மனம் கலங்கி சோர்ந்து விடுகிறார்கள். தான் எவ்வளவு கடின முயற்சி செய்து உழைத்தும் பயனில்லாமல் போய்விட்டதே என்று மனம் சஞ்சலப்படுகிறார்கள். தங்களுக்கு இறையருள் கிடைக்கவில்லையே என்றும் எண்ணிக்கொள்கிறார்கள். இவ்வாறு நினைத்தல் கூடாது. வெற்றி இறைவன் அருளால் கிடைக்கிறது என்றால், தோல்வியும் அவன் அருளாலேயே கிடைக்கிறது. தற்போது இறைவன் உங்களுக்கு கொடுத்திருக்கும் தோல்வி அடுத்தமுறை நீங்கள் வெற்றி பெறுவதற்கும், உங்களை மேலும் தயார்படுத்திக் கொள்வதற்குமே என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

* இறைவன் பாரபட்சம் இல்லாத அன்பு செலுத்துபவர். இருந்தாலும், தன்னை எப்போதும் நினைத்துக்கொண்டும், தன் திருநாமங்களைச் சொல்லி வணங்கிக் கொண்டும் இருப்பவர்களிடம் அதிக அன்பு காட்டுகிறார். தன்னை வேண்டி செயலை துவங்குபவர்கள் வெற்றி பெறுவதற்கு அவர் உறுதுணையாக செயல்படுவார். எனவே, எந்த செயலைச் செய்தாலும் இறைவனை வேண்டிக்கொண்டு துவங்குங்கள். அவர் அருள் கிடைத்துவிட்டால் தோல்வி என்பதே இருக்காது.

* இன்பம், துன்பம் எது வந்தாலும் அமைதியாக அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்படும் சிறு துன்பங்
களுக்காக அதையே எண்ணிக்கொண்டும், பேசிக் கொண்டும் இருக்காதீர்கள். குழந்தைக்கு எந்த நேரத்தில் என்ன தரவேண்டும் என தாய்க்கு தெரியும். அதுபோல் ஆண்டவனும், நாம் கேட்காமலேயே அனைத்தையும் நிறைவேற்றி விடுவார்.
இறைவன் தரும் வாய்ப்பு

* உங்களிடம் ஒரு பொற்காசைக் கொண்டு நேரடியாக பொருள் வாங்க முடியாது. அதை விற்று சாதாரண காசாக்கி பொருள்களை வாங்கலாம். அதற்காக, பொற்காசை விட சாதாரண காசை உயர்ந்ததென சொல்ல முடியாது. கடவுளும் பொற்காசு போல உயர்ந்தவராகவே இருக்கிறார். உங்களுக்கு கிடைக்கும் சிறு, சிறு இன்பங்களுக்கும் கூட அவரே மூலாதாரமாக இருக்கிறார்.

* உலகில் வசிக்கும் ஒவ்வொருவரும் வழிப் போக்கரே. இங்கு யாரும் நிரந்தரமாக தங்கவோ, எந்த இடத்தையும் சொந்தம் கொண்டாடவோ உரிமை கிடையாது. இந்த பாதை தனக்குரியது என்று சிலர் ஆக்கிரமித்து கொண்டாலும் அது அவர்களுக்கு நிரந்தரமானதாக இருக்காது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவ்விடத்தை விட்டு கண்டிப் பாக செல்ல வேண்டும். இதுவே, உலக நியதியாகும்.


* வாய்ப்பைத் தேடி பலர் பல இடங்களில் அலைகிறார்கள். பணம், புகழ், தனித்தன்மையுடன் கூடிய வாய்ப்புகளே பலனளிக்கும் என எண்ணுகிறார்கள். இது தவறான கருத்தாகும். இப்படிப்பட்டவர்களுக்கு என்றுமே வாய்ப்பு கிடைப்பதில்லை. வாய்ப்பு என்பது நாமாக உருவாக்கிக் கொள்வதாக இருக்க வேண்டும். அவ்வாறு வாய்ப்பு கிடைப்பதற்கு இறைவனின் அருள் தேவை. அதற்கு இறைவனிடம் பக்தி செலுத்த வேண்டும். இறைவன், தன்னை சரணடைபவர்களுக்கு ஒவ்வொரு நொடியையும் வாய்ப்பாகவே கொடுக்கிறார். எனவே, வாய்ப்பை தேடி அலைவதைவிட, இறைவனை வணங்கி அவர் துணையுடன் வாய்ப்பை உருவாக்கி கொள்ளுங்கள்
உற்சாகமாக இருக்க வழி

* உற்சாகம் உயிரின் தன்மையாக இருக்கிறது. ஒருவருக்கு பயமோ, கவலையோ ஏற்பட்டு விட்டால் உற்சாகம் குறைந்து விடுகிறது. இதனால் அவர் எந்த செயலிலும் ஆர்வம் காட்டுவதில்லை. அவருக்கு தோல்வியே கிடைக்கிறது. எனவே, இவ்விரண்டையும் மனதை விட்டு அகற்றிவிட வேண்டும். அனை த்தையும் ஒரே நிலையாக ஏற்றுக் கொள்ள பக்குவப்பட்டுக் கொள்ள வேண்டும். இந்த எண்ணம் வந்துவிட்டாலே செய்யும் செயல்களில் வெற்றியும், அதனால் ஆனந்தமும் உண்டாகிவிடும்.

* வெளியில் காணும் பல நிகழ்ச்சிகளின் பதிவாகத்தான் மனம் இருக்கிறது. எனவே, மனம் அமைதியாக இருக்காமல் தான் பார்த்தவற்றையும், உணர்ந்தவற்றையுமே எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறது. நீங்கள் வளர்ந்த சூழ்நிலையைப் பொறுத்து உங்களது மனமும் அத்தகைய சூழலுக்கு ஆட்பட்டுவிட்டது.


* நீங்கள் ஒன்றை நினைத்தால், மனம் ஒன்றை நினைக்கிறது. மனம் வேறு, ஆன்மா வேறு என்று பிரித்து பார்க்காமல், மனதுடன் இணைந்த வாழ்க்கை வாழுங்கள்.

* மனம், உடல், உயிர் இம்மூன்றிற்கும் அடிப்படை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவற்றை நன்றாகவும், உற்சாகமாகவும் வைத்துக்கொள்ள "யோகா' செய்யுங்கள். உடலை வளைப்பது மட்டும் யோகா கிடையாது. நீங்கள் விரும்பும் விதமாக உங்களது சக்தியை நடத்திக் காட்டுவது தான் யோகா. இவ்வாறு உங்கள் சக்தியை நீங்கள் விருப்பப்படும்படி நடத்தினால் உங்களுக்குள் உற்சாகம் தானாகவே ஊற்றெடுக்கும்
இறைவன் வைக்கும் "டெஸ்ட்'

* அனைவரும் ஒரு நாள் இறைவனை அடைந்தாக வேண்டும். முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்ப இப்பிறவியை எடுத்துள்ளோம். அவற்றிற் கான பலன்களை அனுபவித்த பிறகு, மீண்டும் இறைவனை அடைவதற்கு நம்மை தயார் செய்து கொள்ளும் இடம் தான் உலகம்.

* இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளை பரிசாக கொடுக்கிறான். சிலருக்குஅதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் பரிசைத் தருகிறான். தன்னிடம் பரிசு பெற்றவர்கள் பரிசை நேசிக்கிறார்களா அல்லது தன்னை நேசிக்கிறார்களா என்று தெரிந்து கொள்வதற்காக அவன் வைக்கும் சோதனைதான் அது. இதை புரிந்து கொண்டு இறைவன் மீது அன்பு செலுத்துங்கள். தன் மீது அன்பை செலுத்துபவர்களுக்கே இறைவன், "கருணை' என்ற பரிசைக் கொடுக்கிறான்.


* மூன்று வேளை சாப்பிடுதல், கொடுக்கப்பட்ட வேலையை செய்தல், சுய நலத்துடன் செயல்படுதல் என ஒரு குறுகிய வட்டத்திற்குள் பலர் சுழன்று கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு இருப்பவர்கள் இந்த உலகில் படைக்கப்பட்டும் வீணாக இருப்பவர்களே ஆவர். இறைவன் மீது பக்தியை செலுத்தி அவன் அருளைப் பெற முயற்சிப்பதே நிஜமான வாழ்க்கை.

* பெற்றோர் சொல் கேளாத குழந்தைகள் துன்பங்களையே அனுபவிக்கின்றனர். அதுபோலவே, கடவுளின் குழந்தைகளாகிய மக்கள் அவர் விரும்பியபடி நல்வழியில் செல்லாமல், தீய வழிகளில் சென்றால் தீமையை அனுபவிக்கிறார்கள். எனவே, இறைவனுக்கு பயந்து நடக்க வேண்டும்.
அறிவை அலங்கரித்து கொள்ளுங்கள்

ஒருவன், மற்றொருவனால் அவமதிக்கப்படும்போது, அதை அவமதிப்பாக நினைக் காமல் இருக்கும் உயர்ந்த நிலையே மன்னிப்பு ஆகும். உங்களை அவமரியாதை செய்த ஒருவன், தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் போது அவன் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு ஒன்றுமே நடந்துவிடவில்லை என்று எண்ணும் அளவிற்கு பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பக்குவத்தை உடையவர்கள் அனைவரிலும் உயர்ந்தவர் ஆவர். இவர்களே அனைவராலும் மதிக்கப்படுபவர்களாக இருப்பர்.

சிறு குழந்தையை தூக்கி வைத்து விளையாடுகிறீர்கள். அப்போது குழந்தை உங்களை உதைக்கிறது. முடியைப் பிடித்து இழுக்கிறது. அதற்காக நீங்கள் கோபப்படுவதில்லை. மாறாக சந்தோஷப்படுகிறீர்கள். குழந்தை உங்களை வேண்டுமென்றே உதைக்கவில்லை என்பதை நீங்கள் நன்கு புரிந்து வைத்திருப்பதால்தான் சந்தோஷம் வருகிறது. அதைப்போலவே, உங்களுக்கு தீங்கு செய்பவர்களையும் குழந்தையாக நினைத்துக் கொள்ளுங்கள். உங்களின் அன்பிலேயே அவர்கள் முழுவதும் திருந்தி விடுவார்கள். நீங்கள் செலுத்திய அன்பையே உங்களிடமும் செலுத்துவார்கள்.

நீங்கள் உடலை அலங்காரம் செய்வதைவிட்டு அறிவை அலங்கரித்துக் கொள்ளுங்கள். அந்த அறிவினால் பலரது அன்பையும் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். தனக்கு துன்பம் இழைக்கப் பட்டிருப்பது நேரடியாக தெரிந்தாலும்கூட அதை மறப்தோடு, மன்னித்துவிடவும் வேண்டும். இதுவே உயர்ந்த குணமாகும்.
நல்ல சிந்தனை வேண்டும்

* கறந்த பால் உடனே தயிராவதில்லை. அது போல தீய செயல்களின் பலன்கள் உடனே தெரிவதில்லை. நீறு பூத்த நெருப்பு போல மறைந்து இருந்து, தீய செயல்கள் செய்தவனையே துன்பத்திற்கு ஆளாக்குகின்றன. பாவம் செய்தவன் இம்மையிலும், மறுமையிலும் துன்பம் அடைகின்றான். இரு உலகிலும் அவனுக்கு துன்பமே ஏற்படுகிறது.

* தீய செயல்களை செய்பவனுக்கு எதிரிகள் என யாரும் தனியாக இருப்பதில்லை. அவன் செய்த செயல்களே அவனுக்கு எதிரியாகும். அதுவே அவனை அழித்து விடும்.

* தீமை தரக்கூடிய செயல்களை செய்வது மிகவும் எளிது. ஆனால் நன்மை உண்டாக்க கூடிய செயல்களை செய்வது மிகவும் கடினம். நாம் செய்யும் செயல்களால் தீமை ஏற்படும் என தெரிந்தும், அந்த செயல்களை செய்யக் கூடாது. எப்போதும் நல்ல சிந்தனையும், நல்ல செயல்களும் மட்டுமே செய்ய வேண்டும்.

* சிறியவரோ, பெரியவரோ, யார் ஒருவர் பாவங்களை செய்யாமல் மனதை கட்டுப்படுத்துகிறாரோ அவரே துறவி. துறவி என்பவர் தனது குறைகளையும், தான் செய்யத் தவறிய செயல்களையும் மட்டுமே சிந்தித்து பார்க்க வேண்டும். பிறரது குறைகளை கவனிப்பது துறவியின் கடமை ஆகாது.

* தலையை மொட்டை அடிப்பதால் மட்டும் ஒருவர் துறவியாகிவிட முடியாது. ஆசைகளையும், கோபத்தையும் அடக்கி உண்மை பேசுபவனே துறவியாவான். அவன் தனக்குரிய சிறு உணவைக் கூட, பிறருக்கு இடைஞ்சல் இல்லாமல் பெற வேண்டும்.

புத்தர்
அலை பாயாத மனம் வேண்டும்

* காய்கறி, பழங்கள் போன்ற சைவ உணவையே உண்ணுதல் வேண்டும். இதனால் பலவித நோய்களிலிருந்து உடல் காப்பாற்றப்படுகிறது. மனம் அமைதியடைகிறது.

* மனதை அலைய விடக்கூடாது. மனது அலைந் தால் ஆசை உண்டாகும். அதனால், தவறான செயல்கள் செய்ய தோன்றும். வாழ்க்கை நன்கு அமைய மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்ய வேண்டும்.

* சிறந்த சிந்தனையாளர்கள் எல்லாம் நாவடக்கம் உடையவர்களாக இருப்பர். நாவடக்கம் உடைய உயர்ந்த மனிதர்களிடம் உயர்ந்த கருத்துக்கள் வெளிவரும். நாவடக்கம் உடையவர்களை பிறர் பழித்து கூற மாட்டார்கள்.

* அடக்கம், கோபம், அகங்காரம் இல்லாதவன், காம இச்சை ஆகிய குணங்கள் இல்லாதவன், பிறரிடம் குற்றம் காணாதவன் "சான்றோன்' என போற்றப்படுவான்.

* பிறரை ஏமாற்றுவது என்பது மிகவும் கொடிய செயலாகும். அடுத்தவர் பொருளை, அவர்கள் கவனிக்காத நேரத்தில் அபகரிக்க நினைப்பது துன்பத்தை ஏற்படுத்தும்.

* அமைதியான தியானத்தால் அகந்தை அழியும். ஆசை பெருகாது. துன்பம் விலகும். இன்பம் பெருகும். இன்றைய ஆசை நாளைய அழிவிற்கு அடிப்படை.

* நல்லவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நாம் செய்யும் உதவி சிறிதாக இருந்தாலும் அது பிற்காலத்தில் பெரும் நன்மைகளைத்தரும்.

* கோபம் கொள்ளக்கூடாது. கோபம் வந்துவிட்டால் தாம் என்ன செய்கிறோம் என்பதே தெரியாத அளவிற்கு, மனிதன் மிருகம் போல செயல்படுகிறான்
உழைக்காதவனுக்கு நரகமே சொந்தம்

ஆசை இல்லாமல் போனால் துன்பமே கிடையாது. ஆசை என்பது எவ்வளவு கிடைத்தாலும் அடங்காதது. ஆசையை அடக்கிவிட்டால் இந்த பிறப்பிலேயே இன்பம் கிடைத்து விடும்.

உழைத்து வாழ வேண்டும் என்று நினைப்பவன், எதிலும் வெற்றி பெறுகிறான். பொது வாழ்க்கையாக இருந்தாலும், தனி மனித வாழ்க்கையாக இருந்தாலும் உழைத் தால் மட்டுமே வெற்றி நிச்சயம்.உழைக்க வேண்டும் என்ற நினைப்பு இல்லாதவனை நரகம் தன் பக்கம் இழுத்து கொள்ளும்.


செல்வம் சேர்க்க வேண்டும் என்பது அனைவரது ஆசையாக இருக்கலாம். அப்படி சேர்க்கக்கூடிய செல்வம் நியாயமான முறையில் சேர்ந்ததாக இருக்க வேண்டும். தன்னிடம் சேர்ந்த செல்வத்தை வைத்துக்கொண்டு, தகுதி வாய்ந்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் செல்வத்தை மேலும் மேலும் சேர்த்தால், செல்வம் அழிந்து விடும்.

காவி கட்டிக்கொண்டும், திருநீறு தரித்துக்கொண்டும், ருத்ராட்சம் அணிந்து கொண்டும் வாழ்வது அறவாழ்க்கை ஆகாது. பொறாமை, ஆசை, சினம், காமம், கடுஞ்சொல் ஆகியவற்றை ஒழித்து வாழ்வதே அறவாழ்க்கை ஆகும்.

பெரியோர் தீய குணமுள்ளவர்களைக் கண்டு பயப்படுவார்கள். ஆனால் சிறியோர் (அற்பர்) தீய குணங்கள் கொண்ட கூட்டத்தாரை தங்களது சுற்றமாக கருதி அவர்களுடன் சேர்ந்து கொள்வர்.
கவலையிலிருந்து விடுதலை

கவலை இல்லாதவர்கள் யாரும் இல்லை. எதிர்பார்த்தது நடக்காமலோ, விரும்பிய பொருள் கிடைக்காமல் போனாலோ கவலை வந்து விடுகிறது. எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை, உறவுகளில் ஏற்படும் விரிசல், பொருளாதாரத்தில் பிரச்னை, வயது முதிர்வு போன்ற பல நிகழ்வுகளை எண்ணி, மனம் ஓயாமல் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு சிலர், யாராவது ஆறுதல் சொல்லும் வேளையில் மனம் அமைதியடைந்தது போல் இருப்பர். சிறிது நேரம் கழித்து, மீண்டும் கவலை தொற்றிக் கொள்கிறது.

கவலைகளை நீங்கள் மனிதர்களிடம் சொல்லி பயனில்லை. பிள்ளைகள் தங்கள் பிரச்னைகளை பெற்றோரிடம் சொல்வது போல, உங்களது கவலைகளை கர்த்தரிடம் சொல்ல வேண்டும். ஏனெனில், நாம் அனைவருமே தேவனுடைய பிள்ளைகள் என்பதை உணர்ந்து, அவரை பற்றிக் கொண்டு, கவலைகளை அவரிடமே ஒப்படைத்து விடவேண்டும். அவரே, அதற்கு தீர்ப்பு கூற முடியும்.


கவலையுடன் இருப்பவர்களை, கர்த்தர் அருகிலேயே இருந்து இரட்சிக்கிறார். இதையே பைபிள் வசனம், ""நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்,'' என்கிறது.

கர்த்தரிடம், ""உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழ விடாதேயும்,'' என்று மனதார ஜெபியுங்கள். நிச்சயம் கவலைகளிலிருந்து அவர் உங்களை விடுவிப்பார்
என்ன நடந்தாலும் கலங்காதே

நாடகத்தில் பிச்சைக்காரன் வேடத்தில் நடிப்பவனையும், உண்மையில் பிச்சையெடுப்பவனையும் ஒப்பிட்டு பார்த்தால் இருவரும் ஒன்றுபோலவே இருப்பார்கள். ஆனால், பிச்சை எடுப்பவன் உண்மையான ஆனந்தத்தை அனுபவிக்கிறான், நடிப்பவனோ நிர்பந்தத்திற்கு ஆளானவனாக இருக்கிறான். இவர்களில் பிச்சைக்காரன் சுதந்திரன், நடிப்பவன் கட்டுண்டவன் ஆவான். நீ கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல், சுதந்திரமானவனாக இரு

நடந்ததையும் கடந்ததையும் எண்ணி வருத்தப்படாதே. அதேபோல செய்த நற்செயல்களைப் பற்றி பெருமை பேசிக் கொண்டிராதே. அதை நினைவில் கூட வைத்துக் கொள்ளக்கூடாது. செய்த செயல்களுக்கான பலனை கண்டிப்பாக அனுபவித்தே ஆக வேண்டும். நீ இல்லை என்று சொல்வதால் அவை இல்லையென ஆகிவிடாது. அதே சமயம் அச்செயலை மீண்டும் செய்யாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முன்பு செய்த தவறுக்கு கிடைக்கும் பலன்களை துணிவுடன் தாங்கிக்கொள்ள வேண்டும்.

தீய செயல்களை புறக்கணி. அவற்றை மீண்டும் ஒரு போதும் நினைக்காதே. மூட நம்பிக்கையை விடு. மரணமே எதிர்வந்தாலும் பலவீனம் அடையாதே.

எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. உனது கடந்தகால வாழ்க்கையை திரும்பிப் பார். அவ்வாழ்க்கையில் நீ, மற்றவரிடமிருந்து உதவி பெற முயற்சி செய்ததும், அது கிடைக்காமல் போன நிகழ்வுகளும்தான் இருக்கும். நீ பெற்ற உதவி, உனது சுயமுயற்சியால் கிடைத்ததாகத்தான் இருக்கும்.

கடவுளின் கணக்கு புத்தகம்

மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பிக்கும் பொழுது நாவை அடக்கிக் கொண்டு செயலாற்ற வேண்டும். மவுனம் அந்தளவுக்கு நல்ல விஷயம். ஆனால், இதற்குரிய மன அடக்கத்தை அவ்வளவு எளிதில் பெற்று விட முடியாது. அதற்கு நிறைந்த பொறுமையும் பயிற்சியும் தேவை.

உண்மையை நாடுவோர் மவுனமாய் இருக்க வேண்டும். நாவடக்கம் உள்ளவன் யோசிக்காமல் பேசமாட்டான். பேசும்பொழுது ஒவ்வொரு வார்த்தையையும் அளந்தே உபயோகிப்பான். மிகைப்படுத்தி கூறுவதும், உண்மையை மாற்றுவதும், மறைப்பதும் மனிதன் இயற்கையாகச் செய்யக்கூடிய தவறுகளில் சேர்ந்தவை. அந்தத் தவறுகள் வராமல் இருக்க மவுனம் அவசியம். கோபத்தை அடக்குவதற்கும் இது சிறந்ததொரு சாதனம்.

பேசாமல் இருப்பது மட்டும் மவுனமாகாது. பேச சக்தியிருந்தாலும், அனாவசியமான வார்த்தைகளை பேசாமல் இருக்க வேண்டும். உண்மையைத் தேடுவோருக்கு மவுனம் பெருந்துணையாகும்.

ஒவ்வொருவரும் நற்செயல்கள் மட்டுமே செய்ய வேண்டும். கடவுளின் கணக்கு புத்தகத்தில் மனிதர்களின் செயல்கள் மட்டுமே இடம்பெறுகிறது. ஆகவே, செய்யப்படும் செயல்கள் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். நற்செயல்கள் செய்ய வேண்டுமெனில், சத்தியத்தை கடைப்பிடிக்க வேண்டும். சத்தியத்தை பேணுபவர், அமைதியானவராக இருக்க வேண்டியதும் அவசியமாகும். அமைதியுடன் இருப்பவர்களே தங்களது செயல்களில் வெற்றி காண்கின்றனர். சாதனையாளராகவும் உருவெடுக்கின்றனர்.
சைவ உடை அணியுங்கள்

பணம் இருக்கிறது என்பதற்காக ஆடம்பரமான வாழ்க்கை வாழக்கூடாது. பணம் இல்லாத ஏழைகள் எப்படி எளிமையாக வாழ்கிறார்களோ, அந்த வாழ்க்கையைத் தான் வாழ வேண்டும். அந்த வாழ்க்கையும் ஆத்மவிருத்திக்கு நன்மை தரக்கூடியதாகவே இருக்க வேண்டும். அதுவே, அனைத்து நிலைகளிலும் உங்களுக்கு நன்மை தருவதாக இருக்கும்.

ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று ஒவ்வொன்றின் மீதும் ஆசைப்பட்டு ஆளாய் பறந்து கொண்டிருக்காதீர்கள். நீங்கள் ஆசையில்லாதவர்களாக இருந்தாலும், உங்களுடன் இருப்பவர்களும் ஆசையில்லாமல் இருப்பவர்களாக பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் வரம்புமீறி சென்றாலும், எளிமையான வாழ்க்கையை கற்றுக் கொடுங்கள். உங்களது எளிமையே, அடுத்தவர்களும் எளிமையாக வாழ்வதற்கு துõண்டுகோலாக இருக்க வேண்டும்.

பெண்கள் பட்டு, வைரம் போன்ற விலையுயர்ந்த பொருட்களின் மீது அதிகப்பற்று வைக்கின்றனர். அதனை மிகவும் விரும்புவதற்கேற்ப எந்த இன்பமும் அதில் இல்லை. லட்சக்கணக்கான பட்டுப்பூச்சிகளைக் கொன்றுதான், ஒரு பட்டுப்புடவையை தயாரிக்கிறார்கள். பல உயிர்கள் இறப்பதற்கு காரணமாக இருக்கும் ஒரு வஸ்துவினால், நமக்கு எப்படி இன்பம் கிடைக்கமுடியும். உணவில் சைவம் என்று மட்டும் இருந்தால் போதாது. உடுத்தும் உடையிலும் சைவம் இருக்க வேண்டும்.பெண்கள் ஆடம்பர செலவுகளைக்குறைத்து கொள்ள வேண்டும்.
ஒழுக்கம் உள்ளவனே உயர்ந்தவன்

நீங்கள் பல நூல்களை படிப்பதைவிட, ஒரு நல்ல நூலின்படி நடப்பது மேல் . ஒருவரது ஒழுக்கம் அவரது வாழ்க்கைக்கு உயர்வைத் தரும். அதேபோல் உலகம் முழுவதும் ஒழுக்கத்துடன் நடந்தால் சாந்தி நிகழும்.

நமது நடை, உடை, செயல், பழக்க வழக்கம் எல்லாமே ஒழுங்காக அமைந்தால் தான் உயர்ந்தோர் உள்ளங்களில் இடம் கிடைக்கும். நீங்கள் பல நூல்கள் கற்றும், பண்பில்லாமல் இருந்தால், உங்களைவிட கல்வி அறிவில்லாமல், ஒழுக்கத்தோடு இருப்பவன் உயர்ந்தவனே ஆவான். கல்வியைப் பயின்று, ஒழுக்கத்தைக் கைவிட்டவன், நூல் அறுந்த, வால் மட்டும் மிஞ்சிய பட்டம் போன்றவன்.

இறைவன் நமக்கு உடலைத் தந்தபோது, அது ஒரு துõய்மையான இரவல் பாத்திரமாகவே இருந்தது. அதை அவனிடம் திருப்பிக் கொடுக்கும் போதும் அதே துõய்மையுடன் தரவேண்டும். மயிலின் முட்டையைக் கோழி அடைக்காத்தாலும் குஞ்சு பிறக்கும் போது மயிலாகத்தான் இருக்கும். அதேபோல் உங்களிடம் தெய்வீகத் தன்மை இருந்தால், எவரோடு சேர்ந்தாலும் துõய்மையானவராகவே இருப்பீர்கள்.

உங்களது நடத்தை நன்னடைத்தையாக வேண்டும். செல்வம் குறைந்திருந்தாலும், ஒழுக்கத்தில் சிறந்த குடும்பங்கள் உயர்வானவையாக கருதப்படுகின்றன. அக்குடும்பங்களுக்கு பெரும்புகழ் தானாக வந்து சேரும். முள்ளிலே பிறந்து, முள்ளோடு மலர்ந்த தாழம்பூவுக்கும் மணம் உண்டு. அதுபோல, பிறந்த இடம் எத்தகையதாக இருப்பினும், ஒழுக்கம் இருப்பவன் உயர்வானவனாக கருதப்படுவான்.
நல்ல எண்ணமே வெற்றி தரும்

ஒழுக்கம் என்றால், சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்று பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ அடக்குமுறை என்றும், ஆனந்தம் இல்லாத வாழ்க்கை என்றும் நினைக்கிறார்கள். இது தவறாகும். ஒழுக்கமுள்ள மனம் கட்டுப்பாடுடன் இருப்பதுடன், நல்லதை மட்டுமே நினைக்கும். நல்லதை நினைக்காத மனமுடையவர்களால் நிச்சயமாக ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது.

எண்ணத்தில் கட்டுப்பாடும், ஒழுக்கமும் வந்துவிட்டாலே ஒருவருக்கு எல்லாமும் கிடைத்துவிடுகிறது. ஒருவர் பெறும் வெற்றியானது, அவரது எண்ணங்களுக்கு கிடைக்கும் வெற்றியாகவே அமைகிறது. சுத்தமான எண்ணத்துடன் இருப்பவர்களின் மனம் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும்.

ஒருவர் தன் வாழ்க்கையில் அடையும் எந்த சாதனையும் ஒழுக்கத்ததைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. சரியாக செயல்படும் ஒருவர் வெளியில் யாருக்கும் பயப்படவோ, அவர்களது உத்தரவிற்கு கீழ்ப்படிந்து நடக்கவோ தேவையில்லை. சுயமாக முடிவெடுத்து, தன் விருப்பப்படியே செயல்படலாம். இத்தகையவர்கள் எடுக்கும் முடிவுகளும் தவறாக இருக்காதென்பதால், யாரும் அச்சம் கொள்ளவும் தேவையில்லை.

ஒழுக்கம், தியானம் இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று நெருக்கமானவை. தியானம் செய்யும் மனம் அமைதியடைகிறது. அமைதி இருக்கும் இடத்தில் ஒழுக்கம் வந்து விடுகிறது. இவ்விரண்டும் இருப்பவர்களின் மனம் தெளிவானதாக இருக்கிறது.
நல்ல பேச்சுக்கு அனைத்தும் சொந்தம்

* ஒவ்வொருவரும் தங்கள் தன்மையை வெளிப்படுத்த உதவும் பிரதான கருவியாக பேச்சு இருக்கிறது. ஒருவரது பேச்சில் இருந்தே அவரது குணநலனை அறிந்து கொள்ளலாம். பேச்சு நல்ல கருத்துக்களை உடையதாக இருக்க வேண்டும். சிறப்பாக பேசும் திறனுடையவர்கள் சிறந்த மனிதர்களாக திகழ்வர். அவர்களுக்கு அனைத்துமே சொந்தமாகிறது.

* சிலர் பேசும் முன்பாக, எப்படி பேச வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். இது தேவையற்றது. உள் மனதின் தன்மை எப்படியிருக்கிறதோ, அதற்கேற்பவே பேச்சும் அமையும். ஆகவே, மனதை அன்பாகவும், சுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். உள்மனதில் கவனம் கொள்ளாமல், வெளியே நன்றாக பேசவேண்டும் என எவ்வளவு முயற்சி செய்தாலும் அது சரியாக அமையாது.

* ஒவ்வொருவரும் மற்றொருவருக்காகத்தான் பேசுகின்றனர். அத்தகைய பேச்சின் சாராம்சம் கேட்பவருடைய நலனை கருத்தில் கொண்டதாகவும், அவர்களது மனம் புண்படாத படியும் இருக்கவேண்டும். அர்த்தமற்ற, அன்பில்லாத பேச்சால் யாருக்கும் நன்மை விளையப்போவதில்லை.

* பேச்சுக்கு என வரையறையை வகுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவ்வாறு பேசும் பேச்சானது நோக்கம் இல்லாததாகத்தான் இருக்கும். சிலநேரங்களில் அதுவே பிரச்னைகளுக்கும் காரணமாக அமைந்து விடலாம். ஆகவே, சூழ்நிலைக்கு தக்கபடி பேசுவதும், செயல்படுவதும் நல்லது.

மன' யானையை கட்டிப்போட வழி

* சாணத்தில் உதிக்கும் புழுவை, பத்திரமாக எடுத்து, சந்தனக் கலவையில் வைத்தால் அது செத்துவிடும். அதுபோல கயவர்கள் நல்லவர்களுடன் சேர்ந்தாலே அதை மிகப்பெரிய துன்பமாகக் கருதுவர்.

* ஈயானது மலத்திலும் உட்காரும். உணவுப் பொருளிலும் உட்காரும். அதுபோல், சபல குணமுடைய மக்கள் நல்லது கெட்டது என்று வித்தியாசம் பார்க்காமல் இரண்டையும் மாறிமாறிச் செய்கின்றனர். அப்படி இல்லாமல் தேனீ போன்று நல்லதையே நாடி, நல்லதையே செய்தால், இறைவனுக்கு சொந்தமாவோம்.

* செல்வ செழிப்பில் மனதைப் பறிகொடுக்காமல் அருட்செல்வமான தெய்வத்திடம் மனதைப் பறிகொடுங்கள். பொருளிடம் வைக்கும் பற்று, தெய்வ நட்பை புறக்கணித்துவிடும்.

* நுõலின் இழைகளைச் சிறுகச் சிறுக வெட்டி, அவற்றை ஒன்று சேர்த்து முறுக்கலாம். அவ்வாறு முறுக்கிய கயிற்றினால் ஒரு பெரிய யானையைக் கூட கட்டலாம். அதுபோல சிறிய அறிவுரைகளாக இருந்தாலும், அதை கேட்க கேட்க அவ்வப்போது கடைப்பிடித்து வந்தால், மனம் என்ற யானையையே கட்டிப் போட்டு விடலாம்.

* பழக்கம் இல்லாது ஒரு வேலையை ஆரம்பத்தில் செய்யும்போது சிறிது தட்டித் தடுமாறிச் செய்ய வேண்டியிருக்கும். நாளடைவில் அதே வேலை சர்வ சாதாரணமாய் ஆகிவிடும். அதேபோல் நல்ல எண்ணம் மனதுக்குள் நுழைய கஷ்டப்படுகிறது. பழக்கத்தால் அதை மனதுக்குள் எளிதாக நுழையும்படி செய்யலாம். நாளடைவில் நல்லெண்ணங்கள் உடலில் ஊறி, கெட்ட எண்ணங்கள்
உங்களிடம் ஒரு பொற்காசைக் கொண்டு நேரடியாக பொருள் வாங்க முடியாது. அதை
விற்று சாதாரண காசாக்கி பொருள்களை வாங்கலாம். அதற்காக, பொற்காசை விட சாதாரண
காசை உயர்ந்ததென சொல்ல முடியாது. கடவுளும் பொற்காசு போல உயர்ந்தவராகவே
இருக்கிறார். உங்களுக்கு கிடைக்கும் சிறு, சிறு இன்பங்களுக்கும் கூட அவரே
மூலாதாரமாக இருக்கிறார்.
* உலகில் வசிக்கும் ஒவ்வொருவரும் வழிப் போக்கரே. இங்கு யாரும் நிரந்தரமாக
தங்கவோ, எந்த இடத்தையும் சொந்தம் கொண்டாடவோ உரிமை கிடையாது. இந்த பாதை
தனக்குரியது என்று சிலர் ஆக்கிரமித்து கொண்டாலும் அது அவர்களுக்கு
நிரந்தரமானதாக இருக்காது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவ்விடத்தை விட்டு
கண்டிப்பாக செல்ல வேண்டும். இதுவே, உலக நியதியாகும்.
* வாய்ப்பைத் தேடி பலர் பல இடங்களில் அலைகிறார்கள். பணம், புகழ்,
தனித்தன்மையுடன் கூடிய வாய்ப்புகளே பலனளிக்கும் என எண்ணுகிறார்கள். இது தவறான
கருத்தாகும். இப்படிப்பட்டவர்களுக்கு என்றுமே வாய்ப்பு கிடைப்பதில்லை. வாய்ப்பு
என்பது நாமாக உருவாக்கிக் கொள்வதாக இருக்க வேண்டும். அவ்வாறு வாய்ப்பு
கிடைப்பதற்கு இறைவனின் அருள் தேவை. அதற்கு இறைவனிடம் பக்தி செலுத்த வேண்டும்.
இறைவன், தன்னை சரணடைபவர்களுக்கு ஒவ்வொரு நொடியையும் வாய்ப்பாகவே
கொடுக்கிறார். எனவே, வாய்ப்பை தேடி அலைவதைவிட, இறைவனை வணங்கி அவர் துணையுடன்
வாய்ப்பை உருவாக்கி கொள்ளுங்கள்.
உற்சாகம் உயிரின் தன்மையாக இருக்கிறது. ஒருவருக்கு பயமோ, கவலையோ ஏற்பட்டு
விட்டால் உற்சாகம் குறைந்து விடுகிறது. இதனால் அவர் எந்த செயலிலும் ஆர்வம்
காட்டுவதில்லை. அவருக்கு தோல்வியே கிடைக்கிறது. எனவே, இவ்விரண்டையும் மனதை
விட்டு அகற்றிவிட வேண்டும். அனை த்தையும் ஒரே நிலையாக ஏற்றுக் கொள்ள
பக்குவப்பட்டுக் கொள்ள வேண்டும். இந்த எண்ணம் வந்துவிட்டாலே செய்யும்
செயல்களில் வெற்றியும், அதனால் ஆனந்தமும் உண்டாகிவிடும்.
* வெளியில் காணும் பல நிகழ்ச்சிகளின் பதிவாகத்தான் மனம் இருக்கிறது. எனவே, மனம்
அமைதியாக இருக்காமல் தான் பார்த்தவற்றையும், உணர்ந்தவற்றையுமே எப்போதும்
சிந்தித்துக் கொண்டே இருக்கிறது. நீங்கள் வளர்ந்த சூழ்நிலையைப் பொறுத்து
உங்களது மனமும் அத்தகைய சூழலுக்கு ஆட்பட்டுவிட்டது.
* நீங்கள் ஒன்றை நினைத்தால், மனம் ஒன்றை நினைக்கிறது. மனம் வேறு, ஆன்மா வேறு
என்று பிரித்து பார்க்காமல், மனதுடன் இணைந்த வாழ்க்கை வாழுங்கள்.
* மனம், உடல், உயிர் இம்மூன்றிற்கும் அடிப்படை என்ன என்பதை தெரிந்து
கொள்ளுங்கள். அவற்றை நன்றாகவும், உற்சாகமாகவும் வைத்துக்கொள்ள "யோகா'
செய்யுங்கள். உடலை வளைப்பது மட்டும் யோகா கிடையாது. நீங்கள் விரும்பும் விதமாக
உங்களது சக்தியை நடத்திக்காட்டுவதுதான் யோகா. இவ்வாறு உங்கள் சக்தியை நீங்கள்
விருப்பப்படும்படி நடத்தினால் உங்களுக்குள் உற்சாகம் தானாகவே ஊற்றெடுக்கும்.
கவலை அகல தியாகம் செய்

* நீ துன்பமில்லாமல் இருக்க வேண்டும் என்றால் உன்னிடமுள்ள பாவங்களைப் போக்கிக் கொள். அப்பொழுது, உனக்குள் எங்கும் நிறைந்த ஸ்வரூபமான கடவுளை உணர்வாய். தீய செயல் உன்னிடம் இருக்கும் வரை மன அமைதி இருக்காது. மன அமைதி இல்லாதவர்களால் ஒருநாளும் தனக்குள் இருக்கும் இறைவனைக் காண இயலாது. உனக்கு, முதலில் வேண்டியது உள்ளத் தூய்மையாகும்.

* மனம் போன போக்கில் போகிறவர்கள், கட்டுப்பாடில்லாத மிருகங்களாகவே மறுபடி பிறப்பார்கள். சாஸ்திரத்தில் சொன்ன கட்டுப்பாட்டுடன், யார் மனம் இருந்து வருகிறதோ அவர் பயமின்றி இருக்கலாம். உனது மறுபிறவியை நீ உணர்ந்து கொள்ள வேண்டுமென்றால், முதலில் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்.


* ஆடுமாடுகள் கூட தனக்குண்டான பரிசுத்த உணவையே உட்கொள்கிறது. மனிதனுக்கோ கடவுள் நல்ல பகுத்தறிவுடன் கூடிய உடலை கொடுத்திருக்கிறான். அந்த பகுத்தறிவால் தீயது செய்யாமல் நல்லவற்றை செய்தால் இறைவன் உன்னுள் குடியேறுவான்.

* நீ புண்ணியம் செய்துள்ளதற்கு அடையாளம் உனது உள்ளம் துõய்மையாய் இருப்பதேயாகும். உள்ளத்தூய்மை இல்லையென்றால் அதுவே நீ செய்த பாவத்திற்கான அடையாளமாகிறது. நீ தூய்மையாக இருப்பதற்கு ஒரே வழி அனைத்தையும் தியாகம் செய்வதாகும். தியாகம் செய்தால் கவலை அகன்று விடும்.
நன்கு சிந்திக்க நல்ல சிந்தனை,நல்ல ஒழுக்கம்,நல்ல பன்பு,எளிமை, ஆஹா அற்புதமான தொகுப்பு ஒருசேர தொகுத்துஅளிக்கும் அய்யாவுக்கு எவ்வளவு பாராட்டினாலும் போதாது அய்யாஅவர்களுக்கு நிச்சயம் புன்னிய பலன் கிட்டும்

ஒருவன் வாழ்நாள் முடிந்து எமலோகம் சென்றானாம் அப்போது எம தர்மராஜா சொன்னாராம் உனக்கு மோட்சம்
என்றாராம், அவனோ அய்யா நான் வாழ்நாளிள் எந்த ஒரு தர்மமோ புன்னியமோ செய்யவில்லை எனக்கு எப்படி மோட்சம் என்று வினவினான், அதற்க்கு எமதர்மராஜா கூறினார் ஆம் உன்மைதான் நீஎந்த தர்மமும் செய்யவில்லை ஆனால் வழிபோக்கன் ஒருவன் உன்னிடம் குடிக்க தன்னீர் கேட்டான் உன்னிடம் நீ அவனுக்கு தன்னீர் கொடுக்கவில்லை மறாக அவனுக்கு அங்கு செல் தன்னீர் கிடைக்கும் என்று அவனுக்கு வழிகாட்டினாய் அந்த புன்னிய பலனின் காரனமாக உனக்கு மோட்சம் வழங்கினேன் என்று எமதர்மராஜா கூறினாராம் அவன் சற்று சிந்தித்தான் இதற்கே மோட்சம் என்றால் தர்மம் செய்திருந்தால் இன்னும் அதிகபலன் அல்லவா கிடைத்திருக்கும் மனதில் நினைத்து கொண்டானாம்
உடலை சேவைக்கு அர்ப்பணிப்போம்

*இதயப்பூர்வமாக செய்யும் பிரார்த்தனைகள் அற்புதங்களைச் செய்ய வல்லமை பெற்றதாகஇருக்கிறது. அத்தகைய பிரார்த்தனையை கடவுள் மிக விரைவாக ஏற்றுக்கொள்கிறார். ஆகவே, இதயத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். துõய எண்ணங்களை வரவேற்கவும், தீய சிந்தனை, போதனைகளை எதிர்க்கும் துணிவுடையதாகவும் இருக்கும் இதயமே பரிசுத்த இதயம் ஆகும். நீங்களும் உங்கள் இதயத்தை துணிவுடையதாக வைத்துக் கொள்ளுங்கள்.

* வயிற்றுக்கு உணவு இல்லாதிருப்பவர்கள், பசியை எண்ணி வருந்த தேவையில்லை. கடவுளை வேண்டி பிரார்த்தனை செய்தாலே போதும். அவர்களுக்கான தேவைகள் கிடைப்பதற்கு அவர் அருள் செய்து விடுவார். ஏனெனில், பசியால் வாடுபவர்களுக்கு கடவுளே உணவாக இருக்கிறார்.

* கடவுள் ஒவ்வொருவருக்கும் பாரபட்சம் இல்லாமல், ஒரே மாதிரியான உடலைத்தான் கொடுத்திருக்கிறார். அந்த உடலை கடவுளுக்கு சேவை செய்வதற்குத்தான் பயன்படுத்தவேண்டுமே தவிர, சுகங்களை அனுபவிக்கும் வழியில் ஈடுபடுத்தக்கூடாது. உடல் சுகம் என்பது மரணத்திற்கு ஒப்பானது ஆகும். உங்களது உடலை கடவுள் சேவைக்கு அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்.

* வெளிப்பொருட்கள் மீது நாட்டம் வைக்காமல், புலன்களை அடக்கி வையுங்கள். அதனை அடக்குவதற்கு விரதம் இருங்கள். இத்தகைய விரதம் ஆன்ம வளர்ச்சியை அதிகரிக்கும் சாதனமாகவும், உடல், மனம், ஆத்மா ஆகியவற்றை துõய்மைப்படுத்தும் விதமாகவும் இருக்க வேண்டும்
வீரமும் வேண்டும் அன்பும் வேண்டும்

* நம்பிக்கையற்ற மனம் எப்போதும் சந்தேகிக்கவே செய்யும். காரணம் அது புரிந்து கொள்ளவில்லை என்பதுதான். நம் மனத்தின் மீது வேண்டுமானால் நமக்குச் சந்தேகம் இருக்கலாம். ஆனால், இறைவனின் வழி நடத்தலில் சந்தேகம் வேண்டாம்.

* நாம் அன்பு செய்யலாம், இரக்கம் கொள்ள லாம், எந்த உணர்வையும் வெளிப்படுத்த லாம். ஆனால், இறைவனை தவிர வேறெந்த சக்திக்கும் அடிமையாகி விடக் கூடாது.

* வீரத்தையும் அன்பையும் விட்டு விடாதீர்கள். உங்கள் ஆன்மாவை அழிவிலிருந்து காக்கக் கூடியது இந்த இரண்டு நற்குணங்களும் தான். இவற்றால் வாழ்வை சந்தோஷமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

* முதியவர்களிடம் அனுபவம் இருந்தாலும், இளையவர்கள் அவர்களை வென்று விடுகின்றனர். காரணம் இளையவர்களிடம் உள்ள வேகமும், புதிய அறிவும் வெல்லப்பட முடியாதது. அதுவே பழசாகிறபோது தனது சிறப்பை இழந்து விடுகிறது.

* சிலருக்கு அற்பங்கள் அற்புதமாகி விடுகின்றன. சிலருக்கோ அற்புதங்கள் அற்பமாக விடுகின்றன. அதுதான் புனிதர்களுக்கும், தலை சிறந்த புனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

* நாம் மரணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால் அப்போது வாழ்வும் முற்றுப்பெற்றுவிடும். மரணத்தை வீழ்த்த நம்மால் முடியாது. ஆனால், வாழ்க்கையை உன்னதமாக்க முயன்றால் அது கைகூடுகிற காரியம்
பக்தியின் அடிப்படை சத்தியம்

* ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கைப் பயணம் எங்கு செல்கிறது என்றே தெரியாமலேயே சென்று கொண்டிருக்கிறார்கள். எல்லையற்ற வாழ்க்கை எவ்விடத்திலும் முடிவுறப்போவதில்லை. ஆகவே, உங்கள் பயணம் ஆன்மாவைத் தேடுவதாக வைத்துக்கொள்ளுங்கள். எந்த நேரத்தில் ஆத்மாவை அறிந்து கொள்கிறீர்களோ, அவ் விடத்தில் பயணத்தை முடித்துவிடுங்கள்.

* அழகான பொருட்களைக் காணும்போது மகிழ்ச்சி கொள்ளும் மனம், அது அழியும்போது துன்பப்படுகிறது. இது தேவையில்லாதது. அழகான பொருளால் தற்காலிகமான மகிழ்ச்சியை மட்டுமே தரமுடியும். நிரந்தரமான பொருளால் மட்டுமே, நிலையான மகிழ்ச்சி கிடைக்கும். உலகில் கடவுள் ஒருவரைத்தவிர, நிரந்தரமான பொருள் என்று எதுவுமே கிடையாது. ஆகவே, கடவுள் மீது பக்தி கொண்டு, அவரை அடைந்து நிரந்தர இன்பம் காணுங்கள்.

* காலைவேளையில் ஒரு செடியில் ரோஜா மலர்கிறது. அதனை பார்க்கும்போது மனம் மகிழும். மறுநாள் காலையில் அதே மலர் இதழ்களை உதிர்த்து குச்சியாக நிற்கும்போது, முன்பிருந்த மகிழ்ச்சி இருப்பதில்லை. நாம் மகிழ வேண்டும் என்பதற்காக ரோஜா, உதிராமல் அப்படியே இருப்பதில்லை. அது தன்னிலையில் எப்போதும்போல் செயல்படுகிறது. ஆகவே, தற்காலிக இன்பம் தரும் பொருள் மீது ஆசை கொள்ளாதீர்கள்.

* சத்தியமே பேச வேண்டும். சத்திய வழியில் நடக்க வேண்டும். அதுவே பக்திக்கு மிகவும் அடிப்படையான விஷயம்.
பிறவிப்பயன் அடைய வழி

தனித்திருக்கும் ஒன்றாகத் தோன்றினாலும், "அலை' என்ற தனிப்பெயரைப் பெற்றிருந் தாலும், அலையானது, கடலை ஆதாரமாகக் கொண்டு, பிரிக்க முடியாதபடி செயல்பட்டு, மீண்டும் கடலையே அடைகிறது. இதைப் போலத்தான் மனிதர்களின் வாழ்க்கையும் இருக்கிறது. இன்பம் வரும்போது சிரிக்கிறார் கள், சிறிய துன்பத்திற்கு கூட கலங்குகிறார்கள், புரியாத சில கேள்விகளுக்கு விடை தேடி அங்கும் இங்குமாக அலைகிறார்கள்.

இறுதியில் எதுவுமே புலப்படாமல் வந்த இடத்திற்கே சென்று விடுகிறார்கள். உலகில் பிறந்த அனைத்து ஜீவராசிகளும் இறுதிக்காலத்தில் பரமானந்தமாகிய இறைவனைத்தான் அடைகின்றன. இந்த உண்மையைப் புரிந்து கொண்டு இறைவன் மீது நாட்டம் செலுத்துங்கள். அதுதான் பிறவிப்பயன் அடைய வைக்கும் வழியாகும்.

அறிவுமயமான இறைவன் எந்த இடத்திலும் இருக்கிறார். அனைத்திற்கும் தொடக்கமாகவும், இறுதியாகவும் இருக்கும் அவர், உங்களை எந்த நேரத்திலும் அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் தான் உங்களது அறியாமையால் அதனை உணராமல் இருக்கிறீர்கள். அத்தகையவரை அடைய வேண்டுமென நினைப்பவர்கள் பக்தி ஒன்றைத்தவிர வேறெதையும் செய்ய வேண்டாம். அவரைத்தேடி வெளியில் அலைய வேண்டும், அவரோடு பேச வேண்டும் என மிகச்சிறிய வேலையைக்கூட செய்யத் தேவையில்லை. அமைதியாக இருந்தாலே போதும். ஏனென்றால் அமைதி மட்டுமே உண்மையாகும். இந்த உண்மையை உணருபவர்கள் இறைவனை அடைவது நிச்சயம்.
மிகவும் கவனமாக இருங்கள்

* மனிதர்கள் அனைவருக்கும் கவனத் தன்மையும், ஒருமுகப்படுத்தும் திறனும் இருக்கிறது. இதை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்களே எடுத்த செயலில் வெற்றி காண்கின்றனர். ஒருவர் தலைசிறந்த விஞ்ஞானியாகவோ, மேதையாகவோ இருக்கிறார் எனில் அது அவரது ஒருமுகப்படுத்திய தன்மையாலேயே சாத்தியமாகிறது. ஆகவே, மனதை ஒருநிலைப்படுத்துவது அவசியம்.

* வாழ்க்கையில் வெற்றிகாண வேண்டுமென செயல்படுபவர்கள், முதலில் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். இதற்கென பெரியளவில் செயல்படத் தேவையில்லை. சிதறிக்கிடக்கும் உணர்வுகளை ஒரே முனையில் கொண்டு சேர்த்தாலே போதும். கவனம், உணர்வு நிலை இவ்விரண்டையும் ஒன்றாக்கி செயல்படும்போது, வேறெந்த சக்தியாலும் வெல்ல முடியாத அளவிற்கு அது பலன் பெற்று விடுகிறது.


* பலவீனமானவர்கள் கூட, சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதன் மூலம், எளிதில் பலசாலிகளாக மாறிவிடலாம். ஒரு குறிப்பிட்ட யோசனை உங்கள் மனதில் தோன்றும் போது, உடனே அதை செயல்படுத்திவிட வேண்டும். மாறாக அதன் மீது கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டால் அதைவிட வேறு அறிவற்ற செயல் இருக்க முடியாது. அத்தகைய அறிவை பெறுவதற்கு கவனத்தை ஒருமுகப் படுத்தும் திறன் அவசியம்.

* மனதை ஒருமுகப்படுத்த தியானம் செய்யுங்கள். தியானம் மூலம் அமைதி உண்டாகும். அமைதி இருக்குமிடத்தில் மனமும் ஒருமுகப்படும். அந்த நிலையில் செய்யும் செயல்கள் எளிதில் வெற்றி கண்டுவிடும்.
பயத்தால் கடவுளை வணங்குகிறீர்களா?

* கடவுள் மீது வைத்திருக்கும் பக்தியை, ஒரு முக்கோணமாக உருவகம் செய்து கொள்ளலாம். இதில் முதல் கோணம் பேரம் பேசாத தன்மை, இரண்டாவது பயம் இல்லாத தன்மை, மூன்றாவது போட்டியிடாத குணம், இம்மூன்றுமே பக்தியின் அடிப்படை குணங்களாகும்.

* இறைவனிடம் ஏதேனும் எதிர்பார்த்து செலுத்தும் பக்திக்கு எந்த பலனும் கிடைக்காது. எதிர்பார்ப்பு இருக்குமிடத்தில், நிச்சயமாக அன்பு இருக்காது. அன்பில்லாத இடத்தில் பக்தியும் இருப்பதில்லை. கடவுள் தன் மீது பிரதிபலன் பார்க்காத பக்தியையே விரும்புகிறார். ஆகையால், அவர் மீது பரிபூரணமான அன்பை மட்டும் செலுத்துங்கள்.


* பயம் காரணமாகவும், இறைவன் மீது பக்தி செலுத்தக்கூடாது. இத்தகைய பக்தி உடையவர்கள் மனித இயல்பே இல்லாதவர் ஆவர். இவர்களுக்கு இறைவன் ஒரு கையில் சவுக்கும், மறு கையில் செங்கோலும் ஏந்திய தலைவனாகவே தோற்றமளிக்கிறார். அத்தகைய தலைவருக்கு அடிபணியாவிட்டால், அவர் தண்டனை கொடுத்துவிடுவார் என்று பயந்து வணங்குவது மிகவும் இழிவான செயலாகும். அச்சம் இருக்குமிடத்தில் அன்பு இருக்கவே முடியாது. அன்பு இல்லாத பக்தியும் பக்தியே கிடையாது.

* கடவுள் மீது பக்தி கொண்டவர்கள், தங்களது லட்சியமே ஒன்று திரண்டு வந்ததாக கருதி அன்பு செலுத்த வேண்டும். இத்தகைய பக்தியுடன் போட்டியிடுவதற்கு வேறெந்த சக்தியும் கிடையாது. இதை நன்றாக உணர்ந்து கொண்டவர்களுக்கு இறைவனின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

என்றும் உண்மையே பேசுங்கள்

* எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும். அப்பொழுதுதான் உண்மையின் ரூபமாகிய இறைவனை காண முடியும். இறைவனிடம் உள்ளப் பூர்வமான பக்தி கொள்ள வேண்டும். அலுவலகத்திலும், வியாபாரத்திலும் உண்மை நெறி தவறக்கூடாது. கபட வேஷத்தையும், ஏமாற்றுவதையும் விட்டுவிட்டு உண்மையே பேசினால் கடவுளைக் காணலாம்.

* ஒரு மனிதனுக்குக் கடன் அதிகமாகிவிட்டது, அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவன் பைத்தியம் பிடித்தவன் போல் நடிக்க ஆரம்பித்துவிட்டான். வைத்தியனால் குணமும் அடையவில்லை. கடைசியில் கெட்டிக்கார வைத்தியன் ஒருவன் உண்மையைத் தெரிந்து கொண்டான். அந்த போலிப் பைத்தியத்தைத் தனியாக அழைத்துச் சென்று ""அடேய்! நீ என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறாய்! பைத்தியமாக நடித்துக் கொண்டிருந்தால், உண்மையாகவே உனக்குப் பைத்தியம் பிடித்து விடும். இப்பொழுது உன்னிடம் பைத்தியத்திற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. ஜாக்கிரதையாக இரு!'' என்று எச்சரித்தான். இதைக் கேட்ட அந்த மனிதன் பயந்துபோய் பைத்தியமாக நடிப்பதை விட்டுவிட்டான். எவ்வளவுதான் மூடி மறைத்தாலும் உண்மை ஒருநாள் வெளிவந்தே ஆகவேண்டும்.


* பொய், அனைத்தையும் விட கெட்டது. பொய் வேஷம் போடுவதும் கெட்டதே. ஒருவன் பொய் பேசுவதில் விருப்பம் கொண்டால், பொய்யின் மேலுள்ள பயம் அவனுக்குப் போய்விடும். வாய்மையே வெல்லும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எல்லா நாட்டிலும் செல்லும் நோட்டு

* நம்மிடம் ஆயிரம் ரூபாய் சில்லரையாக இருக்கிறது. அது சுமப்பதற்கும், பாதுகாப்பதற்கும் சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் ஒரு மலையைக் கடந்து பக்கத்து நாட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. அப்போது அந்தப்பணம், ரூபாய் நோட்டாக இருந்தால் எடுத்துச் செல்வது சுலபமாக இருக்குமே என எண்ணுகிறோம். ஆனால், அந்த நோட்டு, மலைக்கு அடுத்துள்ள நாட்டில் செல்லுபடியாவதாக இருக்க வேண்டும். நாமும் எங்கு போனாலும் செல்லுபடியாகும் நோட்டாக இருக்க வேண்டும். அதாவது, தனக்கும் பிறருக்கும் உபயோகப்படக் கூடிய செயல்களையே செய்ய வேண்டும்.

* நமது ஊரில் செல்லுபடியாகும் பணம் ரஷ்யாவில் செல்லாது. அனைத்து ஊருக்கும் ஒரே ராஜா இருந்தால் அவனுடைய முத்திரையுள்ள பணம் எங்கும் செல்லுபடியாகும். இந்தப் பதினான்கு உலகங்களுக்கும் ஒரு ராஜா இருக்கிறான். அவன் தான் பரமேஸ்வரன். அவனுடைய சகல ராஜ்யங்களிலும் செல்லும் நோட்டாக "தர்மம்' இருக்கிறது. ஆகவே, தர்மம் செய்யுங்கள்.

* அடுப்பில் தீ மூட்டியிருக்கிறோம். அப்போது மழை பொழிகிறது. நெருப்பு அணைந்துவிடும் போலிருக்கிறது. அந்த சூழலில் எதுவும் செய்யாமல் இருந்துவிட மாட்டோம். இருக்கிற தீப்பொறிகளை விசிறி, சிரமப்பட்டு, மறுபடியும் நெருப்பு பற்றிவிட முயற்சிப்போம். அதேபோல, நம் முன்னோர்களிடம் இருக்கும் ஆசாரத்தையும், தர்மத்தையும் எந்த சூழ்நிலையிலும் அணைந்துவிடாமல் பாதுகாத்து, எல்லாரிடத்திலும் பரவும்படி செய்ய வேண்டும்.
எல்லாரிடமும் குறைபாடு உண்டு

* உணவுக்கு ஆசைப்படும் எலி, பொறியில் அகப்பட்டு தவிப்பதுபோல, மாயையான ஆசைகளை விரும்பி அதில் மாட்டிக் கொள்ளாதீர்கள். ஆசையில் சிக்கிக்கொண்டவர்கள் பொறாமை, கர்வம் போன்ற துன்பங்களை அனுபவிக்கின்றனர். இதனால் வாழ்க்கை யே நரகமாக மாறிவிடுகிறது. நீங்கள் சொர்க்கத்தில் வாழ இக்குணத்தை விட்டுவிடுங்கள்.

* ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பரமாத்மாவின் சக்தி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நிலத்திற்குள் பல சக்திகள் வெளிவராமல் முடங்கியிருப்பதைப்போல, இந்த சக்தி வெளிப்படாமல் மறைந்து கிடக்கிறது. அறியாமை இருக்கும் வரையில் இந்த சக்தி வெளிப்படாமல்தான் இருக்கும்.

* ஒருவன் எவ்வளவு கல்வி கற்றிருந்தாலும், அறிவில் சிறந்தவனாக இருந்தாலும், ஏதேனும் ஒரு விஷயத்தில் அவன் வேறு சிலருக்கு ஏதாவது ஒரு வகையில் குறைந்தவனாகவே இருப்பான். இதுவே, இயற்கை நியதி. எனவே, கற்றவர் கல்லாதவரையும், பணக்காரர்கள் ஏழையையும் இழிவாக நடத்துவது தவறானது.

* தனது விருப்பப்படி செயல்படும் ஒருவர், அச்செயலால் ஏற்படும் எந்த நஷ்டங்களையும் இன்பத்துடனேயே ஏற்றுக்கொள்வார். ஏனெனில், அவர்தான் அந்த துன்பத்திற்கு முழு பொறுப்பாளி ஆகிறார். இவ்வாறு செயல்படுவர் முழு சுதந்திரத்துடன் இருக்கிறார். மற்றொருவர், சுற்றத்தாரின் விருப்பப்படி செயல்களை செய்து அதில் இன்பங்களையே பெற்றாலும், அவர் அடிமையாகவே இருக்கிறார். நீங்கள் சுதந்திரம் பெற்றவர்களாகவே இருங்கள்
நல்ல நூல்களைப் படியுங்கள்

* மூட்டைப் பூச்சியைப் போல் பிறரைத் துன்புறுத்தி வாழக்கூடாது. எலியைப்போலத் திருடி வயிறு வளர்க்கக் கூடாது. கரையான்களைப் போல் பிறர் பொருளை நாசப்படுத்தி வாழக்கூடாது. தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுவதே அமைதியான வாழ்க்கை.

* நல்ல நூல்களை சிரமப்பட்டு படிக்க வேண்டும். உயர்ந்தோருடன் பழக வேண்டும். ஆசிரியருக்குப் பணிவிடை செய்யவேண்டும். இதையெல்லாம் செய்யாமல், ஞானமும் கல்வியும் பெற வேண்டுமென்றால், ஒரு பெண் தன் கணவனைக் கொன்றுவிட்டுப் பிள்ளை வரம் கேட்ட கதை போலாகும். நல்லாசிரியன் ஒருவனை நாடிப்பெறும் கல்வியே ஞானத்தை கொண்டதாகும்.

* குடும்பம் மரத்தைப் போன்றது. அதற்கு வேர் மனைவி, அடிமரம் கணவன், கிளைகள் குழந்தைகள். பலவித பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் நிழல் தந்து, மரம் உறைவிடமாக உதவுவது போல், குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும்.

* நல்ல உணவுகளை உண்பதால் உடல் வளரும். நல்ல நுõல்களைப் படிப்பதால் உணர்வு வளரும். நல்ல உள்ளத்துடன் சதா இறைவனை நினைப்பதனால் உயிர் வளரும். இம்மூன்றும் வாழ்வின் அத்தியாவசியத் தேவைகள்.

*எப்போதும் இறைவனின் நினைவு வேண்டும். அது முடியவில்லையானால் எழுகின்ற போது, சாப்பிடும் போது மற்றும் படுக்கும் போதாவது நினைக்க வேண்டும்.
கடவுளின் மறுஉருவம்

மனிதர்கள் ஒவ்வொருவரும், பிறர் மீது அன்பு செலுத்துபவர்களாக இருக்க வேண்டும். ஒன்றுக்கும் உதவாத வகையில் பேசிக்கொண்டும், பிரச்னைகளை வளர்க்கும் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டும் இருக்கக்கூடாது. அதனால் எந்த பயனும் ஏற்பட்டுவிடாது. அன்பு ஒன்று மட்டும்தான், மனிதர்களை ஒருவரோடு ஒருவர் பிணைக்கும் அற்புத சக்தியாகும். ஆகவே, அனைவர்மீதும் பாரபட்சம் இல்லாமல் அன்பு காட்டுங்கள்.

தன் மீது அன்பு செலுத்துவதற்கென யாரும் இல்லாதவர்கள், உலகிலுள்ள நோய்களில் எல்லாம் கொடிய நோயை அனுபவிப்பவர்கள் ஆவர். அந்த நோய்க்கு அன்பை விட, வேறு மருந்துகள் எதுவும் கிடையாது. அவ்வாறு ஆதரவில்லாமல் இருப்பவர்களிடம் அன்பு காட்டுங்கள். அவர்கள் மீது பாசம் வைத்து பரிவுடன் நடந்து கொள்ளுங்கள். அதுவே, அவர்களது நோயை குணப்படுத்தும் அரிய மருந்தாக இருக்கும். ஏனெனில், அன்பினால் செயல்படுத்த முடியாத செயல் என்று எதுவுமே இல்லை.


ஏழைகள் கடவுளின் மறு உருவமாக இருப்பவர்கள். அவர்கள் மீது அன்பு காட்டுங்கள். அதோடு, உங்களது உழைப்பும் அவர்களுக்கானதாகவே இருக்கட்டும். அத்தகைய உழைப்பு, கடவுளுக்காக செய்யும் உழைப்பு ஆகும்.

உள்ளத்தில் அன்பும், கருணையும் இல்லாமல் வெளியே அன்பாக இருப்பதுபோல வெறுமனே காட்டக்கூடாது. அத்தகைய சேவையால் பயன் ஏதும் கிடையாது. உங்களது சேவை மனதில் இருந்து வருவதாக இருக்க வேண்டும்.
நல்லவர்களுடன் சேருங்கள்

தான் சேர்ந்திருக்கும் நிலத்தின் தன்மைக்கேற்ப மணம், சுவை, நிறம் ஆகிய தன்மைகளை தண்ணீர் பெறுகிறது. அசுத்த நீருடன் சேரும்போது, அது அசுத்தமாகிறது. அதேபோல, உடன் பழகுபவர்களின் தன்மைக்கேற்பவே குணங்களும் அமையும். தீயவர்களுடன் சேர்வதால் தீமை உண்டாகுமே தவிர, வேறு நன்மைகள் ஏதும் ஏற்படாது. நல்ல குணமுடையவர்கள், தீயோர்களுடன் நட்பு கொள்ளாமல் விலகியே இருப்பர்.

ஒருவனுக்கு அமையும் நட்பைப் பொறுத்தே, அவனுக்கு அறிவும், நடத்தைகளும் அமைகிறது. நல்லவர்களுடன் சேர்வதால் மனம் சுத்தமாகவும், செயல்கள் நல்லதாகவும் இருக்கும். ஒருவன் தான் செய்த நற்செயல்களால் மட்டுமே இறந்த பின்பும் புகழ்பெற்றிருக்க முடியும். அப்படிபட்ட செயல்கள் பெற நல்ல குணமும், நல்லோர்களின் நட்பும் அவசியம் வேண்டும்.


ஒழுக்கத்துடன் வாழ்வதற்கு நல்லவர் சேர்க்கையை விட, வேறு எதுவும் உதவி செய்யாது. அதேபோல், தீயவழியில் ஈடுபட்டு வீணாக வாழ்ந்து துன்பத்தில் வீழ்வதற்கு, தீயவர் சேர்க்கையைவிட வேறு எதுவும் துணையாக இருக்காது.

ஒரு செயலை செய்யும் முன், அதற்கு வரும் இடையூறுகள், விளையும் பயன், தேவையான பொருள், கருவி, காலம், ஆற்றல், இடம் போன்றவற்றை நன்கு சிந்தித்துவிட்டு அதில் இறங்க வேண்டும். இந்த குணங்கள் நல்ல நண்பர்களின் நட்பினாலேயே வரும். செயலை செய்யத் தொடங்கியவுடன் பார்த்துக் கொள்ளலாம் என்பது முட்டாள்தனம்.
அழிக்க வரும் மூச்சுக்காற்று

கடவுள், உங்கள் மூச்சிற்குள் மூச்சாகவும், உயிரின் உயிராகவும் இருக்கிறார். மலர்களில் வாசம் போல, உங்கள் இறைவன் உங்களுக்குள்ளே இருக்கிறார். கஸ்துõரிமான் தன் நாபியிலுள்ள கஸ்துõரி மணத்தைப் புல்லில் தேடுவது போல், நீங்கள் அங்கும் இங்கும் இறைவனை தேடாமல் உங்களினுள் உள்ள இறைவனை காண முயற்சி செய்யுங்கள். கடவுளை நம்பாவிட்டாலும் பரவாயில்லை. தெய்வத்தன்மையுள்ள மனிதர்களையாவது நம்புங்கள்.

உங்கள் தேவை எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அதை அடைவதற்கு கெட்டவர்களின் உதவியை நாடாதீர்கள். ஏனெனில், அது எதாவது ஒரு வகையில் உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்கும். நல்லவர்களின் உதவியை நாடுங்கள். அது நிலையான மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

நீங்கள் பலம் குறைந்தவர்களை அவமதிப்பதோ, தொந்தரவுக்கு உள்ளாக்குவதோ கூடாது. ஏனெனில், நீங்கள் கொடுக்கும் தொந்தரவால் ஏற்படும் மனக்கஷ்டத்தை வெளிப்படுத்தாமல், அவர்கள் அடக்கி வைப்பதால் ஏற்படும் மூச்சுக்காற்று பலம் வாய்ந்தது. அது உங்களை அழித்துவிடும்.

நீங்கள் நினைத்த காரியம் உடனே நடக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அதனால் உங்கள் செயல் சரியான பாதையில் போகாமல் மனம் பதட்டமடைந்து நிலை தடுமாறும். தோட்டக்காரன் நுõறு குடம் தண்ணீர் ஊற்றினாலும் பருவம் வந்தால்தான் பழம் பழுக்கும். அதேபோல் நீங்கள் நினைப்பது மெல்ல மெல்ல நடப்பதால் நிலையான மகிழ்ச்சி கிடைக்கும்
இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்

நம் வாழ்க்கையின் நோக்கம் ஞானத்தைப் பெறுவதேயாகும். இன்பம் துய்ப்பது வாழ்க்கையின் நோக்கமல்ல. சிற்றின்ப சுகங்கள் அழிந்துவிடும் இயல்பு கொண்டது. சிற்றின்ப சுகங்களை வாழ்க்கையின் நோக்கமாகக் கொள்வதாலேயே பலவிதமான கஷ்டங்கள் வந்து சேருகின்றன. அனுபவம் அடைய அடையதான் வாழ்க்கையின் நோக்கம் இன்பமல்ல, ஞானமே என்பதை உணர முடிகிறது. அவ்வாறு உணரும்போது, இன்பம் துன்பம் ஆகிய இரண்டுமே நல்லறிவு புகட்டும் ஆசான்களாக உதவி புரிகின்றன. நன்மையைப் போலவே தீமையிலிருந்தும் நாம் தேர்ச்சியடையப் பெறுகிறோம்.

நாம் அனைவரும் உள்ளத்தாலோ உடலாலோ ஏதோ ஒரு செயலை செய்து கொண்டிருக்கிறோம். அந்த செயல்கள் யாவும் நம் மீது, தமது அடையாளத்தை பொறித்துவிட்டு அகல்கிறது. நல்லதை செய்தால் நல்ல அடையாளம், கெட்டதை செய்தால் அதற்கேற்றதை முத்திரையைக் குத்துகிறது.

நாம் பல காரணங்களை முன்னிட்டு முயற்சி செய்கிறோம். காரணம் ஏதுமின்றி எவரும் முயற்சி செய்வதில்லை. சிலர் புகழைப் பெற விரும்புகின்றனர். அந்தப் புகழுக்காக அவர்கள் செயல்புரிகின்றனர். சிலர் செல்வம் பெறுவதை நோக்கமாகக் கொண்டு செயல் புரிகின்றனர். வேறு சிலர் செல்வாக்கின் கொண்டு செயல் புரிகின்றனர். சிலர் மோட்சம் பெறுவதற்காக செயல்புரிகின்றனர். ஆனால், பயன் எதையும் எதிர்பார்க்காமல் விருப்பு வெறுப்பின்றிக் செயல் புரிவதே சிறப்பாகும்.

URS
SUNDARAM